For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"அதை" பார்க்கக் கூடாது..இப்படிப் பண்ணுங்க.. இதையெல்லாம் செய்யாதீங்க.. நியூசி. அரசு செய்த பிரச்சாரம்!

Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: ஆபாச படங்களை சிறுவர்கள் பார்ப்பதில் இருந்து தடுப்பது குறித்தும் அப்படி பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அந்த படங்களில் நடிக்கும் நடிகர்களை வைத்தே நியூசிலாந்து அரசு ஆன்லைன் மூலம் பிரசாரம் செய்து வருகிறது.

தற்போது சிறுவர்கள், டீன் ஏஜ் மாணவ மாணவிகள் லேப்டாப்பையோ செல்போனையோ பயன்படுத்தும் போது பெற்றோர் மனம் "பக்கு பக்கு" என உள்ளது. இணையதளத்தில் கொட்டி கிடக்கும் ஆபாச இணையதளங்கள் இது போன்ற இரண்டும் கெட்டான் வயதில் இருக்கும் சிறுவர்களையும் விடலை பருவத்தில் இருக்கும் மாணவர்களையும் குறிவைத்து ஆபாச படம் மூலம் பணம் சம்பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இடுப்பழகில் பெஸ்ட் யார்.. ரம்யாவா .. இந்துஜாவா.. என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க!இடுப்பழகில் பெஸ்ட் யார்.. ரம்யாவா .. இந்துஜாவா.. என்ன இப்படி கிளம்பிட்டாய்ங்க!

படபடப்பு

படபடப்பு

இதனால் இவர்கள் யூடியூப் மூலம் ஏதாவது வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போது இந்த ஆபாச வீடியோக்கள் இவர்களை துரத்தும். முதலில் ஆபாசம் இல்லாமல் கவர்ச்சிகரமாக வரும் இந்த லிங்கை கிளிக் செய்தால் ஆபாச படங்கள் கொட்டும். இதனால் மாணவர்களின் மனம் பாதிக்கப்பட்டு சிறுவயதிலேயே தவறு செய்ய தூண்டும். மேலும் இது குழந்தைகளுக்கு நல்ல மன நலனை தராது என்பதால் பெற்றோர் சற்று படபடப்புடனே இருப்பர்.

தீமைகள்

தீமைகள்

ஆனால் நியூசிலாந்தில் ஒரு ஆன்லைன் இணையதளம் உள்ளது. அதன் பெயர் #Keepitrealonline. இது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் இணையதளத்தை பயன்படுத்த பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கு உதவிடும் வகையிலான புதிய பிரசாரம் ஆகும். இதன் மூலம் சிறுவர்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனால் ஏற்படும் மன ரீதியிலான பாதிப்புகள் குறித்தும் வீடியோ மூலம் விளக்கப்படுகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அதிலும் ஆபாச படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளே இந்த பிரசாரத்தை செய்கிறார்கள். அந்த பிரசார வீடியோவில் ஆடையில்லாத இரு நடிகர்கள் ஒருவரது வீட்டுக்கு வருகிறார்கள். அங்கு அவரை ஒரு குழந்தையின் தாய் வரவேற்கிறார்கள். அப்போது கையில் லேப்டாப்புடன் ஒரு சிறுவன் சுற்றிக் கொண்டு வெளியே வந்து இவர்களின் கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறான்.

குழந்தைகள் ஆபாச படம்

குழந்தைகள் ஆபாச படம்

அப்போது இவர்கள் ஆபாச படங்களை 18 வயதுக்குள் குறைவானோர் பார்ப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து கூறுகிறார்கள். மேலும் தங்கள் குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதிலிருந்து எப்படி தடுக்கலாம் என்பது குறித்து அறிவுரை வழங்குகிறார்கள். இது நியூஸிலாந்து அரசு விளம்பரமாகும். இந்த விளம்பரம் தொடங்கப்பட்டு 10 நாட்களில் லட்சக்கணக்கான பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த பிரசாரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

English summary
Newzealand's viral advertisement uses porn actors to teach consent and helps the country's new online safety.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X