For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இனி 'வாழ்வே மாயம்' கமல் மாதிரி கஷ்டம் தேவையில்லை... மண்ணிலிருந்து கேன்சருக்கு மருந்து வரப் போகுது!

Google Oneindia Tamil News

லண்டன்: நம் காலடி மண்ணிலிருந்தே கேன்சரை குணப்படுத்தும் அடுத்த தலைமுறை மருந்துகள் உருவாக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இயற்கையின் பாதையிலிருந்து மனிதர்கள் விலகிச் சென்றதன் விளைவாக எண்ணிலடங்கா புதுப்புது நோய்கள் பரிசாக கிடைத்துள்ளன. அவற்றிற்கு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கும் வேலையில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் ராக்பெல்லர் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஐந்து கண்டங்களில் (வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா) உள்ள கடற்கரை, மழைக்காடுகள் மற்றும் பாலைவனங்களில் சேகரிக்கப்பட்ட 185 மண் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

புதிய ஆன்டிபயாடிக்...

புதிய ஆன்டிபயாடிக்...

இதுவரை நடத்தப்பட்ட ஆய்வின் படி, இதுவரை அறியப்படாத ஆன்டிபயாடிக் மற்றும் கேன்சரை குணப்படுத்தும் மருந்துகளை மண்ணிலிருக்கும் நுண்ணுயிரிகளிலிருந்தே கண்டுபிடிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளதாம்.

புதிய மாதிரிகள்...

புதிய மாதிரிகள்...

இதையடுத்து குகைகள், வெப்ப நீரூற்றுகள், தீவுகள் மற்றும் நகர பூங்காக்கள் போன்ற தனித்த சுற்றுச்சூழலில் உள்ள மாதிரிகளையும் சேகரிக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

நமது கனவுக்கான முதல்படி...

நமது கனவுக்கான முதல்படி...

இது தொடர்பாக ராக்பெல்லர் பல்கலைக்கழக விஞ்ஞானி சீன் பிராடி கூறுகையில், "சுற்றுச்சூழலிருந்து கிடைத்த பாக்டீரியாக்கள் திகைப்பூட்டும் பல புதிய மூலக்கூறுகளை உலகிற்கு வழங்கியது. அதில் பல மூலக்கூறுகள் புதிய மருந்துகள் உருவாக காரணமாக அமைந்தது. இந்த நம்பமுடியாத பன்முகத்தன்மையே நுண்ணுயிரிகள் மூலம் ரசாயன உற்பத்தி செய்யும் நமது கனவுக்கான முதல் படி" என்கிறார்.

சோதனை மாதிரிகள்...

சோதனை மாதிரிகள்...

மேலும், இந்த ஆய்வை விரிவாக்கும் பொருட்டு ‘மண்ணிலிருந்து மருந்து' என்ற இந்த திட்டத்திற்காக பொது மக்களிடம் இருந்தும் சோதனை மாதிரிகள் வரவேற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The world's next generation of antibiotic or anti-cancer drugs could come from the most unlikely place - the soil under your feet. Scientists from US' Rockefeller University have analyzed soil from beaches, forests and deserts on the five continents to discover the best places in the world to mine untapped antibiotic and anticancer drugs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X