For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிகாராகுவா: ராட்சத விண்கல் விழுந்து 40 அடி பள்ளம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மனாகுவா: நிகாராகுவா தலைநகரில் ராட்சத விண்கல் விழுந்து 39 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது.

நிகாராகுவா நாட்டின் தலைநகரான மனாகுவா நகரில் ராட்சத விண்கல் ஒன்று விழுந்துள்ளது. அங்குள்ள விமான நிலையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தீப்பிழம்பாக விழுந்த இந்த விண்கல், சுமார் 40 அடி குறுக்களவு கொண்ட மிகப்பெரிய பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Nicaragua says meteorite probable cause of blast in capital

விண்கல் விழுந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆனாலும், விண்கல் விழுந்த ஓசையும் அதிர்வும் மனாகுவா முழுவதும் உணரப்பட்டதாகவும், நிலநடுக்கத்தை அளவீடு செய்யும் கருவியிலும் அதன் தாக்கம் பதிவானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விண்கல் விழுந்த போது பலத்த அதிர்வும், அது விழுந்த ஓசை ஏற்படுத்திய அதிர்ச்சியில் அடுத்ததாக மிகப்பெரிய அதிர்வும் உணரப்பட்டுள்ளது. , அருகில் இருந்த விமான நிலையத்திற்கும் விமானங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

English summary
A mysterious late-night blast in the Nicaraguan capital of Managua that left a crater 12 meters (40 feet) wide was most likely caused by a meteorite, government scientists said on Sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X