For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நைஜீரியாவில் தொடர் குண்டுவெடிப்பு... 54 பேர் உடல் சிதறி பலி

Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியாவில் மசூதி ஒன்றில் பிரிவினை தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 54 பேர் பலியாகினர்.

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து குண்டுவெடிப்பு உள்ளிட்ட நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நைஜீரிய ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

nigeria blast

இந்த நிலையில் மைடுகுரி நகரின் அஜிலாரி பகுதியில் உள்ள மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இந்த தாக்குதலில் 43 பேர் பலியாகினர்.

இதையடுத்து, அகுள்ள சந்தைப் பகுதியில் அடுத்த குண்டு வெடித்தது. இதில் 11 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

மேலும், அங்குள்ள காட்சி கூடத்தின் மீதும் தீவிரவாதிகள் பயங்கர வெடிபொருட்களை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதேபோன்று 3 இடங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்ததாக நைஜீரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

English summary
Suspected Islamic extremists killed at least 54 people when they detonated explosive devices in crowded places Sunday night in Maiduguri the capital of the northeastern state of Borno, members of civilian defense group said Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X