For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பற்றி எறியும் காட்டுத் தீ... 9 நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்டு வந்த சிலி தீயணைப்பு வீரர்கள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிலி: சிலியின் வால்பராய்சோ வனப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கு வேகமாக பரவி வருவதால், 4 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடம் நோக்கி அப்புறப்படுத்தப்பட்டனர்.

அப்போது குடியிருப்பு பகுதியில் குட்டி போட்டிருந்த நாய்க்குட்டிகளையும் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

சிலியில் கடந்த சில நாட்களாக, வால்பராய்சோ வனப்பகுதிகளில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகமும் அதிகமாக உள்ளதால், தீ மள மள வென பரவி வருகிறது.

கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவியதால், அருகில் வசித்து வந்த 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விரைவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும், வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குடியிருப்பு பகுதியில் 9 நாய் குட்டிகளை போட்டிருந்தது. அந்த நாய் குட்டிகளின் சத்தம் தீயணைப்பு வீரர்களுக்கு கேட்கவே உடனடியாக தீயணைப்பு வீரர்கள் நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, வால்பாரிசோ வனப்பகுதியில் நிகழ்ந்த காட்டு தீக்கு, 13 பேர் பலியானார்கள். மேலும் 2 ஆயிரம் வீடுகள் தீயில் கருகின என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As crews battle forest fires in Chile, rescue workers take time to rescue a brood of nine trapped puppies who all make it out alive. Gavino Garay reports.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X