For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா மீது நாங்களாக போர் தொடுக்க மாட்டோமா?.. யார் சொன்னது?.. அணு கொள்கையில் மாற்றம் இல்லை.. பாக்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything

    இஸ்லாமாபாத்: எங்கள் அணு ஆயுத கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.

    காஷ்மீர் விவகாரத்தில் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கி ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. இந்த நடவடிக்கையால் பாகிஸ்தானும் சீனாவும் கடுங்கோபத்தில் உள்ளது.

    இந்தியாவின் நடவடிக்கையை தடுக்க உலக நாடுகளிடம் உதவி கேட்டும் அவை கொடுக்கவில்லை. இதனால் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா அதன் நடவடிக்கையை திரும்ப பெறாவிட்டால் போர் மூளும் என எச்சரிக்கை விடுத்தார்.

    முத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கியவர்கள்.. 5இல் ஒருவர் மட்டுமே.. அரசின் பரபரப்பு சர்வேமுத்ரா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்கியவர்கள்.. 5இல் ஒருவர் மட்டுமே.. அரசின் பரபரப்பு சர்வே

    தயார்

    தயார்

    இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரோ போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    இம்ரான் கான்

    இம்ரான் கான்

    லாகூரில் சீக்கிய மக்கள் முன்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசுகையில், போர் எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது. எனவே இந்தியா மீது முதலில் நாங்களாக போர் தொடுக்க மாட்டோம் என தெரிவித்தார். இது போல் அவ்வப்போது தங்கள் நிலைப்பாட்டை இம்ரான் கான் மாற்றிக் கொண்டது உலக நாடுகளிடையே உற்று கவனிக்கப்பட்டு வருகிறது.

    கொள்கையில் மாற்றம்

    கொள்கையில் மாற்றம்

    இந்த நிலையில் அணு ஆயுதத்தை நாங்களாக முதலில் பயன்படுத்த மாட்டோம் என பாகிஸ்தான் இதுவரை அறிவிக்காமல் இருந்த நிலையில் இம்ரான் கான் கருத்து மூலம் பாகிஸ்தானின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு விட்டதாக கருதப்பட்டது.

    வெளியுறவு துறை

    வெளியுறவு துறை

    இதையடுத்து இம்ரான் கானின் கருத்துக்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் முகமது பைசல் கூறுகையில் இரு அணு ஆயுத நாடுகளுக்கிடையே போர் குறித்த பாகிஸ்தான் அணுகுமுறை குறித்து பிரதமர் இம்ரான் தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது.

    பாதுகாப்பு துறை

    பாதுகாப்பு துறை

    இரு அணு ஆயுத நாடுகளிடையே மோதல் நடக்கக் கூடாது என்பது உண்மைதான். அதே சமயத்தில் எங்களது அணு ஆயுத கொள்கையில் எந்த வித மாற்றமும் இல்லை என்றார். இந்தியாவை பொறுத்தவரை அணு ஆயுதத்தை தானாக முதலில் பயன்படுத்துவது இல்லை என்பதுதான் அணு ஆயுத கொள்கையாக இருந்தது. ஆனால் எதிர்காலத்தில் சூழலை பொருத்து இதில் மாற்றம் ஏற்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Pakistan says no change in Nuke Policy afer Imran Khan's speech in Lahore that his country wont initiate war first with Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X