For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி?

Google Oneindia Tamil News

வெல்லிங்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை நியூசிலாந்து மட்டும் ஒற்றை நாடாக எதிர்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கடந்த 100 நாட்களாக அங்கு புதிதாக கொரோனா கேஸ்கள் இல்லை.

உலகம் முழுக்க மொத்தமாக 19,854,324 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 730,519 பேர் பலியாகி உள்ளனர். அமேரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா என்று உலகின் பெரிய நாடுகள் எல்லாம் கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் மொத்தமும் கொரோனா காரணமாக இப்படி மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நியூசிலாந்து மட்டும் கொரோனாவை விரட்டி அடித்து நிம்மதியாக இருக்கிறது. கடந்த 100 நாட்களாக அங்கு புதிய கொரோனா பாதிப்பே இல்லை.

வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா? டிஸ்சார்ஜ் மிக அதிகம்வேகமெடுத்த தமிழக அரசு.. ஒரே நாளில் இன்று நடத்திய பரிசோதனை எவ்வளவு தெரியுமா? டிஸ்சார்ஜ் மிக அதிகம்

நாடுகள்

நாடுகள்

நியூசிலாந்தை போலவே வேறு சில நாடுகளிலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது உள்ளது. சீனா, ஹாங்காங், தைவான், தென் கொரியா, வியட்நாம், மாங்கோலியா, ஆஸ்திரேலியா, பிஜி என்று கொரோனாவை நிறைய நாடுகள் கட்டுப்படுத்தி உள்ளது. ஆனால் அதில் இருந்து எல்லாம் நியூசிலாந்து எப்படி வேறுபடுகிறது என்றால், நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக புதிய கேஸ்கள் இல்லை. ஆனால் மற்ற நாடுகளில் இடையிடையே அவ்வப்போது புதிய கேஸ்கள் வர தொடங்கி உள்ளது.

 ஆஸ்திரேலியா எப்படி

ஆஸ்திரேலியா எப்படி

அதிலும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எப்படி நியூசிலாந்தை பின்பற்றி கட்டுப்பாடுகளை விதித்தது . ஆனாலும் கூட ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் போன்ற இடங்களில் கேஸ்கள் வர தொடங்கி உள்ளது . மொத்தத்தில் நியூசிலாந்து மட்டும் உலக நாடுகளிடம் இருந்த விலகி தனித்து இருக்கிறது. மற்ற வல்லரசு நாடுகள் சாதிக்க முடியாததை நியூசிலாந்து சாதித்து இருக்கிறது.

 வேறுபாடு எப்படி

வேறுபாடு எப்படி

மற்ற நாடுகளிடம் நியூசிலாந்து எப்படி வேறுபட்டது என்று கேட்கலாம். நியூஸிலாந்தில் விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுதான் வைரஸை கட்டுப்படுத்தவும், மொத்தமாக நியூஸிலாந்தை விட்டு விரட்டி அடிக்கவும் காரணமாக மாறியுள்ளது.சரியாக கடந்த பிப்ரவரி 26ம் தேதிதான் நியூசிலாந்தின் முதல் கொரோனா கேஸ் வந்தது. அப்போதில் இருந்து சரியாக மே 1ம் தேதி வரியா 65 நாட்கள் நியூசிலாந்தில் கொரோனா தீவிரமாக பரவி வந்தது.

தீவிரம்

தீவிரம்

பிப்ரவரி 26ம் தேதி நாட்டிற்குள் முதல கொரோனா கேஸ் வந்ததும் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அதிரடியாக நாட்டிற்குள் கட்டுப்பாடுகளை விதித்தார்.மற்ற நாடுகளை போல நானும் லாக்டவுன் போடுகிறேன், என்று லாக்டவுன் கொண்டு வராமல் மிக மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் நியூசிலாந்தில் லாக்டவுன் விதிக்கப்பட்டது. பொருளாதாரம் மோசமானால் கூட பரவாயில்லை, கண்டிப்பாக கொரோனாவை தடுக்க வேண்டும் என்று மிக கடுமையான ஊரடங்கை அமல்படுத்தினார் ஜெசிந்தா.

 மூன்று முக்கியம்

மூன்று முக்கியம்

நியூசிலாந்து கொண்டு வந்த மூன்று முக்கியமான கட்டுப்பாடுகள்தான் அந்த நாடு கொரோனாவிற்கு எதிராக வெற்றிபெற காரணம் என்கிறார்கள்.

1.மொத்தமாக எல்லையை மூடியது. எந்த வகையில் புதிய கொரோனா கேஸ் வெளிநாட்டில் இருந்து வராமல் தடுத்தனர்.

2. தீவிரமான லாக்டவுன் போட்டு, மக்களை வீட்டுக்குள் அடைத்தனர். மிக மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

3. இன்னொரு பக்கம் தீவிரமான காண்டாக்ட் டிரேசிங். எல்லோருக்கும் டெஸ்டிங், தீவிர சிகிச்சை என்று மூன்று முக்கியமான விஷயங்களை செய்தனர்.

 காண்டாக்ட் டிரேசிங் எப்படி

காண்டாக்ட் டிரேசிங் எப்படி

எந்த ஒரு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும், அதில் வெற்றிபெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே ஒரு விதிதான் முக்கியம்.. ''stick to basics''.. அதாவது அடிப்படை விதிகளை மீறாமல் அதை பின்பற்றுவது. அதை நியூசிலாந்து மிக சரியாக செய்தது. அதாவது மக்களை வெளியே விடாமல் தடுத்தது, வேகமான துரிதமான டெஸ்டிங். மிக கட்டுப்பட்டுடன் கூடிய காண்டாக்ட் டிரேசிங். இது மிக வேகமாக கொரோனா பரவலை தடுக்க காரணமாக அமைந்தது .

 டெக்னலாஜி

டெக்னலாஜி

அதிலும் நியூசிலாந்தில் காண்டாக்ட் டிரேசிங் செய்வதற்காக ஜிபிஎஸ் தொழில்நுட்பங்களை கூட பயன்படுத்தினர். ஒரு இடத்திற்கு கொரோனா பாதித்தவர் சென்று இருந்தார் என்றால், அவரின் ஜிபிஎஸ் லொகேஷன் இருந்த இடத்தில் வேறு யாரெல்லாம் இருந்தனர் என்று ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து, அவர்கள் எல்லோரையும் சோதனை செய்து, உடனே தனிமைப்படுத்தினார்கள்.

 செய்யாத தவறுகள்

செய்யாத தவறுகள்

மற்ற நாடுகள் செய்யாத தவறை நியூஸிலாந்து தவிர்த்தது.

லாக்டவுன் போடப்பட்டாலும், மக்களுக்கு அடிப்படையை வசதிகள், பொருட்கள் கிடைக்க நியூசிலாந்து ஏற்பாடு செய்தது.

மக்களுக்கு போதுமான நிவாரண நிதியை அளித்தது.

லாக்டவுனில் எந்த விதமான தளர்வையும் அமல்படுத்தவில்லை.

என்ன நடந்தாலும், காண்டாக்ட் ட்ரேஸிங் மற்றும் டெஸ்டிங்கில் சின்ன தவறை கூட செய்ய விடாமல் தடுத்தனர்.

அதன்பின் மக்களுக்கு கொரோனா குறித்த மிக சரியான புரிதலை ஏற்படுத்தி மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி என்று அனைத்தையும் உறுதிப்படுத்தினர். அந்நாட்டின் குடிமகன்கள் எல்லோருக்கும் இலவசமாக மாஸ்க் வழங்கப்பட்டது.

 ஜெசிந்தா எப்படி

ஜெசிந்தா எப்படி

இந்த கடுமையான கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல்தான் கொரோனாவிற்கு எதிராக நியூசிலாந்தின் வெற்றிக்கும் காரணம் ஆகும். இந்த வெற்றிக்கு பின் இருக்கும் ஒரே நபர்.. அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மட்டுமே! மொத்தமாக 1569 கேஸ்கள் அந்த நாட்டில் வந்தது, இதில் 22 பேர் பலியான நிலையில், தற்போது ஒரு கேஸ் கூட இல்லை. ஜெசிந்தாவின் மிக நுணுக்கமான திட்டமிடல் மூலம் 100 நாட்களாக கொரோனா ஃபிரி நாடாக நியூசிலாந்து திகழ்கிறது!

English summary
No Coronavirus case for the past 100 days: How New Zealand won the pandemic easily?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X