For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

76 நாள் லாக்டவுனுக்கு பிறகு.. கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டான வுகானில் முதல் முறையாக ஜீரோவான எண்ணிக்கை

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா எனும் தொற்றுநோய் பரவ காரணமாக இருந்த வுகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து விட்டதால் நேற்றைய நிலவரப்படி அங்கு கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

    கொரோனாவின் Hotspot வுகானில் முதல் முறையாக ஜீரோ-வான எண்ணிக்கை

    சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் வுகான் நகரில் கொரோனா எனும் நோய் மீன் சந்தையிலிருந்து பரவியதாக சொல்லப்படுகிறது. இது அங்கிருந்து உலக நாடுகளுக்கு பரவியதால் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கொரோனாவின் ஹாட்ஸ்பாட்டாக கருதப்படும் வுகான் மற்றும் ஹுபேய் நகரங்களில் கடந்த 23 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா உலக நாடுகளுக்கு பரவும் வரை சீனா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம்சாட்டியதை அடுத்து 56 மில்லியன் மக்கள் தொகை கொண்ட வுகானில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டது.

    இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு.. நேற்று ஒரே நாளில் 1,975 கொரோனா நோயாளிகள் இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு.. நேற்று ஒரே நாளில் 1,975 கொரோனா நோயாளிகள்

    இயல்பு நிலை

    இயல்பு நிலை

    இந்த நிலையில் சீனாவில் கொரோனாவால் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பத் தொடங்கியது. இதையடுத்து கடந்த ஏப்ரல 8ஆம் தேதி முதல் வுகான் நகரம் இயங்கத் தொடங்கியது. 76 நாட்கள் லாக்டவுனுக்கு பிறகு வுகான் நகரம் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.

    எண்ணிக்கை

    எண்ணிக்கை

    வெட் மார்க்கெட்களும் புழங்கத் தொடங்கின. இந்த நிலையில் அங்கு கொரோனாவின் 2ஆவது அலை வீசியது. இதனால் கொரோனாவால் சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,632 ஆக உயர்ந்துவிட்டது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82,692 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா

    கொரோனா

    நோய் பரவ காரணமாக இருந்த வுகானை எடுத்துக் கொண்டோமேயானால் ஏப்ரல் 16 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 325 -லிருந்து 50,333 ஆக உயர்ந்துவிட்டது. அது போல் இறந்தோரின் எண்ணிக்கை 1,290-லிருந்து 3,869 ஆக உயர்ந்துள்ளது.

    புதிதாக யாரும் இல்லை

    புதிதாக யாரும் இல்லை

    இந்த நிலையில் வுகான் மருத்துவமனையிலிருந்து 11 நோயாளிகள் கடந்த வெள்ளிக்கிழமை பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து வுகான் மருத்துவமனையில் கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் யாரும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அது போல் நேற்றைய நிலவரப்படி புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கப்படவில்லை.

    டிரம்ப் புகார்

    டிரம்ப் புகார்

    இந்த கொடூர வைரஸ் வுகானில் உள்ள வைரஸ் பரிசோதனை கூடத்திலிருந்து பரவியிருக்கலாம் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதுவும் சீனா வேண்டுமென்றே பரப்பிவிட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் புகார் கூறியிருந்தார். இந்த நிலையில் வைரஸ் பரவ காரணமாக இருந்த வுகானில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாதது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    The number of Covid 19 patients in China's Wuhan hospitals now turned to Zero after 76 days lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X