• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

கோவிட்: முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறைகள் இங்கிலாந்தில் இனி இல்லை

By BBC News தமிழ்
|
முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை
Getty Images
முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை

இங்கிலாந்தின் கொரொனா தொடர்பான பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முடிவடையும். பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிவது, கோவிட் பாஸ்போர்ட் ஆகிய இரண்டும் கைவிடப்படும் என்று போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அதோடு, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசு உடனடியாகக் கைவிடும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

பூஸ்டர்கள் காரணமாக இங்கிலாந்து, "ப்ளான் ஏ"-விற்குத் திரும்புகிறது மற்றும் இதுவரை மக்கள் பிளான் பி நடவடிக்கைகளை எவ்வாறு பின்பற்றினார்கள் என்று பிரதமர் கூறினார்.

அமைச்சர்களிடம் பேசியபோது, ஒமிக்ரான் அலை தேசிய அளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புவதாக அவர் கூறினார்.

"இது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய தருணம்," என்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்தியாளர் சந்திப்பில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் கூறினார்.

மேலும், "நாம் அனைவரும் ஒன்றாக வேலை செய்யும்போது இந்த நாட்டினால் என்ன சாதிக்க முடியும் என்பதை இது நினைவூட்டுகிறது.

ஆனால், இதை ஒரு முடிவாகப் பார்க்கக்கூடாது. ஏனெனில், வைரஸ் மற்றும் அதன் எதிர்கால திரிபுகளை ஒழிக்க முடியாது. அதற்குப் பதிலாக, 'காய்ச்சலுடன் எப்படி வாழ்கிறோமோ அதே வழியில் கோவிட் உடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்," என்றார்.

மேலும், கை கழுவுதல், காற்றோட்டமான அறைகள் மற்றும் பாசிடிவ் ஆனால், சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை, வைரஸை கட்டுக்குள் வைத்திருக்கத் தொடர்ந்து எடுக்குமாறு மக்களை வலியுறுத்தினார். அதோடு, தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக்கொள்ள முன்வருமாறும் வலியுறுத்தினார்.

முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில் அமைச்சர்களுக்கு அளித்த அறிக்கையில்,

  • இரவு விடுதிகள் மற்றும் பெரிய நிகழ்வுகளுக்குள் நுழைவற்கான கட்டாய கோவிட் பாஸ்போர்ட்கள் முடிவடையும். இருப்பினும் நிறுவனங்கள் விரும்பினால் தேசிய சுகாதார சேவையின் கோவிட் பாஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • மக்கள் இனி வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் அலுவலகங்களுக்குத் திரும்புவது குறித்து முதலாளிகளுடன் ஆலோசிக்க வேண்டும்.
  • முகக் கவசம் இனி கட்டாயமாக்கப்படாது. இருப்பினும் மக்கள் மூடிய அல்லது நெரிசலான இடங்களிலும் அந்நியர்களைச் சந்திக்கும்போதும் முகக்கவசம் அணிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • வியாழக்கிழமை முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இனி வகுப்பறைகளில் முகக் கவசம் அணிய வேண்டியதில்லை. அதோடு பொது இடங்களில் அவற்றைப் பயன்படுத்துவது குறித்த அரசாங்க வழிகாட்டுதல் 'விரைவில்' அகற்றப்படும்.

மேலும், பயண விதிகளை தளர்த்துவது மற்றும் இங்கிலாந்தில் பராமரிப்பு இல்லங்களுக்கு வருவதற்கான கட்டுப்பாடுகள் பற்றிய கூடுதல் அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வரலாமென்று போரிஸ் ஜான்சன் கூறினார்.

முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை
Getty Images
முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தொற்று ஆய்வை மேற்கோள் காட்டி, இங்கிலாந்தில் நோய்த்தொற்றுகளின் அளவு குறைந்து வருவதை அதன் தரவு காட்டுவதாக கூறிய ஜான்சன், மருத்துவமனை அனுமதிகள் நிலையாகிவிட்டதாகவும், "ஒமிக்ரான் அலை இப்போது தேசிய அளவில் உச்சத்தை எட்டியிருக்கலாம்," என்று விஞ்ஞானிகள் நம்புவதாகவும் கூறினார்.

இருப்பினும் ஆரம்பப் பள்ளிகளில் நோய்வாய்ப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கூறியவர், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார சேவை மையங்களில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தைச் சுட்டிக்காட்டினார்.

இவற்றோடு, கொரோனா வைரசுடன் வாழ்வதற்கான நீண்டகால வியூகத்தை அரசு அமைக்குமென்றும் ஜான்சன் கூறினார்.

தேசிய சுகாதார சேவையில், குறிப்பிடத்தக்க அழுத்தங்கள் இருப்பதாலும் தொற்றுநோய் "முடியவில்லை" என்பதாலும் குளிர்காலத்தின் கடைசி வாரங்களில் "எச்சரிக்கையுடன் இருக்குமாறு" மக்களை அவர் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தொழிற்கட்சித் தலைவர் ஸ்டார்மர், "அறிவியல் கூறும் வரை இது பாதுகாப்பானது," என்று ப்ளான் பி நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார். மேலும், "கோவிட் நோயுடன் நன்றாக வாழ்வதற்கான வலுவான திட்டம்", பிரதமரை "மிகவும் திசைதிருப்புவதாக" குற்றம் சாட்டினார்.

அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் இல்லாத நிலையில், பள்ளிகளுக்கு கோவிட் ஒரு சவாலாக இருப்பதாக பள்ளித் தலைவர்கள் சங்கங்கள் தெரிவித்தன.

பள்ளி மற்றும் கல்லூரி தலைவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ஜெஃப் பார்டன், வகுப்பறைகளில் முகக் கவசங்கள் போடவேண்டியதில்லை என்ற முடிவை வரவேற்றார். ஆனால், கல்வியில் இன்னும் பெரிய இடையூறு இருக்கும்போது நெருக்கடி முடிந்துவிட்டது என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது குறித்து அரசாங்கத்தை அவர் எச்சரித்தார்.

ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங், ப்ளான் பி-யை கைவிடுவது "தேசிய சுகாதார சேவையின் மீதான அழுத்தத்தைக் குறைக்க எதுவும் செய்யாது," என்று கூறியது.

முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை
Getty Images
முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை

"நிலைமை இன்னும் அபாயகரமான முறையில் சமநிலையில் இருக்கும்போது, தடுப்பூசியை மட்டுமே நாம் நம்ப முடியாது," என்று அதன் தலைமை நிர்வாகி பாட் கல்லன் கூறினார்.

ஆனால், மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ததாலும் ஒமிக்ரானில் எச்சரிக்கையாக இருந்ததாலும் பாதிக்கப்பட்ட விருந்தோம்பல் துறைக்கு, நிவாரணம் கிடைத்தது.

நோய்த் தொற்றுகளின் அளவுகள் வீழ்ச்சியடையும்போது, கடந்த குளிர்காலத்தில் இருந்ததைவிட இன்னும் அதிகமாக உள்ளன. மேலும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை இப்போதுதான் குறையத் தொடங்கியுள்ளது.

தடுப்பூசி மற்று முந்தைய நோய்த்தொற்றுகளால் உருவான நோய் எதிர்ப்பாற்றலை இணைக்கும்போது, இங்கிலாந்து சிறந்த பாதுகாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும் என்பதே உண்மை.

இதனால், எதிர்காலத்தில் மக்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாகமாட்டார்கள் என்று அர்த்தமில்லை. ஆனால், தீவிரமாக நோய்வாய்ப்படுவோரின் அளவை இது கட்டுப்படுத்தும்.

முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை
BBC
முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை

மேலும், இந்த ஒமிக்ரான் அலையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,000 பேர் என்ற அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இது அமைச்சர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நேரம் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

சமீபத்திய கோவிட் கட்டுப்பாடுகள், அதிகமாகப் பரவக்கூடிய ஒமிக்ரான் திரிபுடைய பரவலின் வேகத்தைக் குறைப்பதகாகவும் பூஸ்டர் தடுப்பூசி வெளியீட்டிற்கான நேரத்தை வழங்குவதற்காகவும் முதன்முதலில் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவிட் கட்டுப்பாடுகள்
Getty Images
கோவிட் கட்டுப்பாடுகள்

இங்கிலாந்து முழுவதும் இதுவரை 37 மில்லியன் பூஸ்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்தில் இரவு விடுதிகளை மீண்டும் திறக்க அனுமதிப்பது மற்றும் உள்ளரங்க நிகழ்வுகளுக்கான வரம்புகளை நீக்குவது உள்ளிட்ட சில தளர்வுகள் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்படுகின்றன.

வேல்ஸில் வெள்ளிக்கிழமை முதல் மக்கள் விளையாட்டு நிகழ்வுகளுக்குத் திரும்புவார்கள், அடுத்த வாரம் இரவு விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். வடக்கு அயர்லாந்தில் இரவு விடுதிகள் மீண்டும் திறக்கப்படும். வடக்கு அயர்லாந்தில், இரவு விடுதிகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் உள்ளரங்க நிகழ்வுகள் அனுமதிக்கப்படுவதில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
UK Prime Minister Boris Johnson says Face masks will no longer be compulsory. Omicron is hitting hard in Britian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X