For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெட்டுனா செத்துடுவோம்.. மரண பயத்தில் 80 வருசமா நீளமா முடி வளர்க்கும் 92 வயது தாத்தா!

வியட்நாம் நாட்டை சேர்ந்த ஒருவர் கடந்த 80 ஆண்டுகளாக முடி வெட்டாமல் இருந்து வருகிறார்.

Google Oneindia Tamil News

ஹனோய்: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கடந்த 80 ஆண்டுகளாக முடியே வெட்டாமல் இருந்து வருகிறார். தற்போது அவரது முடியின் நீளம் 5 மீட்டரை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சினை ஆரம்பித்ததில் இருந்து பல ஆண்கள் முடி வெட்ட முடியாமல், ஷேவிங் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சலூன் கடைகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்ததால் பலரும் தேவதாஸ் போன்று தான் சுற்றித்திரிந்தனர். தற்போது சலூன் கடைகள் திறக்கப்பட்டுவிட்டாலும் கூட, வைரஸ் பற்றி அச்சம் நீங்காததால் பெரும்பாலானோர் பரட்டை தலையுடன் தான் அலைகின்றனர்.

ஆனால் இவர்கள் யாரும் போட்டி போட முடியாத அளவுக்கு கடந்த 80 ஆண்டுகளாக முடியே வெட்டாமல் இருந்து வருகிறார் வியட்நாம் நாட்டை சேர்ந்த 92 வயது முதியவர் ஒருவர். அந்நாட்டின் மீகாங் டெல்டா பகுதியை சேர்ந்த நுயென் வான் சைன் என்பவர் தான் அவர்.

வட கொரியாவில் என்னப்பா நடக்குது.. வட கொரியாவில் என்னப்பா நடக்குது.. "கோமா"வுக்கு போய்ட்டார்னு சொன்னாங்க.. திரும்ப வந்துட்டாரே கிம்!

பயம்

பயம்

"முடியை வெட்டினால் நான் இறந்துவிடுவேன் என்பது எனது நம்பிக்கை. எனவே பிறப்பால் எனக்கு கிடைத்த எதையும் மாற்ற நான் விரும்பவில்லை. இதுவரை நான் தலை சீவியது கூட கிடையாது. முடியை வளர்ப்பது மட்டுமே எனது வேலை. பார்ப்பதற்கு சுத்தமாகவும், நன்றாகவும், உலர்ந்து இருப்பதற்காகவும் ஒரு துணியை மட்டும் தலையில் கட்டிக்கொள்வேன் ", என்கிறார் நுயென் வான் சைன்.

எண்ணெய் அலங்காரம்

எண்ணெய் அலங்காரம்

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்ட நுயென் வான் சைன், தனது முடியை ஒரு காவி துணியால் சுற்றி வைத்திருக்கிறார். அவர் அணிவதும் காவி உடை தான். சிறு வயதில் தனது தலைமுடிக்கு எண்ணெய வைத்து, தலை சீவி சிங்காரித்து இருக்கிறார் சைன். ஆனால் ஒருமுறை கடவுள் அவர் கனவில் வந்து கட்டளையிட்டதை அடுத்து, அதை நிறுத்துவிட்டாராம்.

படிப்புக்கு பை பை

படிப்புக்கு பை பை

சிறு வயதில் இருந்தே சைன் முடி வெட்டியதில்லையாம். பள்ளி படிக்கும் போது முடி வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் முடி வெட்ட விரும்பாத அவர், பள்ளிக்கு போவதையே நிறுத்தி விட்டாராம். இதனால் அவரது முடியின் நீளம் தற்போது 5 மீட்டரை தாண்டுகிறது.

அப்பா வழியில் மகன்

அப்பா வழியில் மகன்

இத்தனை நீளமான சைனின் முடியை பராமரிக்க உதவுவது அவரது நான்காவது மகன் லுமா தான். அவருக்கு தற்போது 62 வயதாகிறது. தந்தையைப் போல முடி வெட்டினால் மரணம் ஏற்படும் என லுமாவும் நம்புகிறார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

English summary
A 92 years man from Vietnam's Mekong delta region kept hair uncut for almost 80 years. His hair is now five meters long.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X