For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வண்டி வண்டியாக காபி குடித்தாலும்.. ஒன்னும் ஆகாதாம்ப்பா.. சொல்லிட்டாங்க!

Google Oneindia Tamil News

லண்டன்: ஒரு நாளைக்கு எத்தனை கப் காஃபி குடித்தாலும் எந்த கெடுதலும் வராதாம்; லண்டன் பல்கலை ஆராய்ச்சி ஒன்று இப்படிக் கூறியுள்ளது.

ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை கப் காஃபி குடித்தாலும் ஒன்றும் ஆகாது என்று லண்டனில் உள்ள பல்கலைக் கழகம் ஓன்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளது.

கால்களில் ரெக்கையை கட்டிக்கொண்டு பறந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் பலருக்கு உணவருந்தக் கூட நேரம் இருப்பதில்லை. குறிப்பாக மார்கெட்டிங், பத்திரிக்கை, காட்சி ஊடகம், மெடிக்கல் ரெப் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் குறித்த நேரத்திற்கு உணவருந்துவது என்பது இயலாத காரியம்.

காபி டீ

காபி டீ

செல்லுமிடமெல்லாம் உணவை கொண்டு செல்லவும் முடியாது, உரிய நேரத்திற்கு நல்ல உணவு கிடைப்பதும் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் இவர்களது ஒரே தேர்வு டீ, அல்லது காஃபி. இது ஒருபுறம் என்றால் காலை எழுந்ததும் பல் துலக்குகிறோமோ இல்லையோ காஃபியை கையில் எடுத்து விடுகிறோம்.

காபி குடிச்சீங்களா

காபி குடிச்சீங்களா

அதோடு மட்டுமல்ல, காலை உணவு அருந்தும்போது ஒரு காஃபி, 11 மணிக்கு ஒரு காஃபி, பின்னர் தலைவலி வந்தால் ஒரு காஃபி, மன அழுத்தம் என்றால் ஒரு காஃபி, நண்பர்கள் வந்தால் காஃபி, விருந்தினர்கள் வந்தால் ஒரு காஃபி என்று நமது வாழ்வு காஃபியோடு பின்னி பிணைந்துள்ளது.

பித்தம்னு சொல்வாங்க

பித்தம்னு சொல்வாங்க

ஆனால் காஃபி அதிகமாக குடித்தால் பல்வேறு கெடுதல்கள் வரும், அதிலும் 'டீ' யை விட காஃபி மிகவும் கெடுதலானது, இதயத்திற்கு நல்லது இல்லை என்றெல்லாம் பல தகவல்கள் நடமாடிக் கொண்டு இருக்கின்றன. இதயத்திற்கு சுவாசக் காற்றை உட் கொண்ட ரத்தத்தை செலுத்தும் நாளங்கள் இறுக்கமடைவதாகவும் இதன் காரணமாக திடீரென மாரடைப்பு ஏற்படக் கூடும் என்றும் கருதப்பட்டது.

மூக்கைத் துளைக்கும் சுவை

மூக்கைத் துளைக்கும் சுவை

இருந்தாலும் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் முதல் ரயிலில் விற்கப்படும் காஃபி வரை, காஃபிக்கென்று தனி மவுசு இருந்தே வருகிறது. தெருவுக்கு தெரு, மூலைக்கு மூலை பல்வேறு பெயர்களில் காஃபி கடைகள் முளைத்த வண்ணம் உள்ளன.

நோ கவலை

நோ கவலை

இந்த நிலையில் ஒரு நாளைக்கு 25 கப் காஃபி குடித்தால் கூட இதயத்திற்கு எந்த கேடும் வராது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகம் 8 ஆயிரம் பேரை தேர்வு செய்து காஃபி குடிப்பது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

நல்லா குடிங்க நிறைய குடிங்க

நல்லா குடிங்க நிறைய குடிங்க

தினமும் ஒரு கப் காபி அருந்துபவர்கள், மூன்று கப் வரை அருந்துபவர்கள், பல முறை அருந்துபவர்கள் என பிரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, யாருடைய உடலிலும் காபி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இனி என்ன, யாருப்பா அங்கே, அண்ணனுக்கு ஒரு காஃபி சொல்லு!

English summary
A research has revealed that there is no harm in drinking more coffe in a day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X