For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தட்டு நிறைய பீட்சாக்களும், குட்டி பையன் டெட்டியும்.. இதுதான் இப்ப வைரல்!

அமெரிக்க சிறுவனின் பிறந்த நாள் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Google Oneindia Tamil News

டஸ்கன், அரிசோனா, அமெரிக்கா: டெட்டி.. இதுதான் இந்த சிறுவனின் பெயர். 6 வயதாகிறது. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் டஸ்கன் நகரில் தாய் மாஜினியுடன் சிறுவன் வசித்து வருகிறான். இவனது அப்பா அலாஸ்காவில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 3-ம் தேதிடெட்டிக்கு பிறந்தநாள். அதனால் தன் அப்பாவை பிறந்த நாளுக்கு எப்படியாவது வந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ஆனால் அப்பாவுக்கு லீவு கிடைக்காத காரணத்தினால் 18-ம் தேதிதான் ஊருக்கு வர முடிந்தது.

[எதிர்த்து பேச முடியாத "புருஷன்".. கோபக்கார "மனைவி".. ஒரு பரிதாப கொலை!]

சமாதானப்படுத்தினார்

சமாதானப்படுத்தினார்

அதனால் 3-ந்தேதி டெட்டி பிறந்த நாளை கொண்டாடவே இல்லை. எனவே மாஜினி, மகன் பிறந்த நாளை 21-ம் தேதி வைத்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார். ஏற்கனவே அப்பா வராத சோகத்தில் இருந்த மகனை, பிறந்த நாளை அமர்க்களமாக செய்திடலாம், கலக்கிடலாம், உன் கூட படிக்கிறவங்கள எல்லாம் நான் உன் பிறந்த நாளுக்கு கூப்பிடுகிறேன்" என்று சமாதானப்படுத்தினார்.

நண்பர்களுக்கு அழைப்பு

நண்பர்களுக்கு அழைப்பு

அதன்படியே பிறந்த நாளும் ஏற்பாடு ஆனது. டெட்டியின் நண்பர்கள் 32 பேருக்கு மாஜினி, இன்விடேஷன் கொடுத்துவிட்டு வந்தார். அதோடு அந்த நண்பர்களின் வீட்டுக்கும் சென்று அவர்களின் பெற்றோரிடமும் உங்கள் பிள்ளைகளை என் மகன் பிறந்த நாளுக்கு அனுப்பி வைத்து விடுங்கள்" என்று அனுமதியும் கேட்டார். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர்.

தட்டு நிறைய பீட்சா

தட்டு நிறைய பீட்சா

விழா தொடங்கியது. அம்மாவின் ஏற்பாடுகளை கண்டு மலைத்து நின்றான் மகன். பெரிய ஹாலில் மேஜைகள் போடப்பட்டிருந்தது. டெட்டியின் நண்பர்களுக்கு பீட்சா பிடிக்கும் என்பதால் மேஜைகளில் ப்ட்சாக்கள் நிறைந்து காணப்பட்டன. டெட்டி முகத்தில் சந்தோஷம் எட்டி பார்த்தது. ஆனால் நேரம் ஆக ஆக அது காணாமல் போக தொடங்கியது. காரணம், டெட்டியின் நண்பர்கள் ஒருவர் கூட விழாவுக்கு வரவில்லை.

பரிதாப சிறுவன்

பரிதாப சிறுவன்

நண்பர்கள் வருவார்களா என்று எட்டி எட்டி பார்த்துகொண்டே இருந்தான் டெட்டி. நண்பர்களுக்காக பீட்சா நிறைந்திருந்த மேஜைகள் அருகில் சென்று அவற்றையெல்லாம் பார்த்து கொண்டே நின்றான். அவன் முகமே அப்போது பரிதாபத்தில் வழிந்து நிறைந்தது. இதை பார்த்த அம்மா மாஜினி, தன் மகனை போட்டோ எடுத்து கொண்டார். அதனை ட்விவிட்டரிலும் போட்டார்.

இலவச அழைப்பு

இலவச அழைப்பு

அந்த போட்டோதான் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே சோகமாக இருந்த சிறுவனுக்கு மேலும் சோகம் ஏற்பட்டு பாவமாக இருந்ததை பார்த்து phoenix என்ற கால்பந்து அணி தாங்கள் நடத்தப்போகும் எல்லா போட்டிகளுக்கும் சிறுவனுக்கு இலவச அழைப்பு விடுத்திருக்கிறார்கள். டெட்டியும் குஷியாக ஏற்றுக் கொண்டுள்ளானாம்.

English summary
No one shows up to a 6 year old Arizona boy's birthday party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X