For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாஸ்வேகாஸ் துப்பாக்கி சூட்டில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை: வெளியுறவுத்துறை

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: லாஸ்வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் மேண்டலே பே ஓட்டல் அருகில் திறந்த வெளியில் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடந்தபோது, அங்கிருந்த உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

No reports have been received of any Indian nationals amongst those affected in the LasVegas shooting

இந்த பயங்கர தாக்குதலில் 406 பேர் படுகாயமடைந்தனர். 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் உலகையே உலுக்கியுள்ள நிலையில், தாக்குதல் நடந்து சில மணி நேரங்கள் கழித்த நிலையில், அந்த தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

இதனிடையே இந்தியர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களோ என்ற பதற்றம் இந்தியர்களிடம் காணப்பட்டது.

இதுகுறித்து இந்திய நேரப்படி இரவு 8.10 மணியளவில் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்தார். சான்பிரான்சிஸ்கோவிலுள்ள இந்திய தூதரகம் நிலைமையை கண்காணித்து வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

English summary
No reports have been received of any Indian nationals amongst those affected in the #LasVegas shooting incident, ANI quotes MEA Spokesperson
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X