For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேர்ந்து இருந்தா பொறுக்காதே.. வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி!

2018ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாயாவுக்கும், தென்கொரியாயாவுக்கும் இடையில் பிரச்சனை உருவாக வாய்ப்பு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி!- வீடியோ

    பியாங்யாங்: நீண்ட வருடங்களுக்கு பின் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் நெருங்கி வந்து இருக்கிறது. ஆனால் இன்னும் அரசியல் ரீதியாக பிரிந்து இருந்து இருக்கிறது.

    அதே சமயத்தில் விளையாட்டு ரீதியாக ஒற்றுமையாக இருக்கிறது. இரண்டு நாடுகள் தற்போது ஒரே கொடியின் கீழ் தான் விளையாடி வருகிறது.

    தற்போது அங்கு இருக்கும் வடகொரியா வீரர்களுக்கு மனக்கசப்பை தரக்கூடிய நிகழ்வு ஒன்று ஐநா சபை விதியால் நடக்க இருக்கிறது.

    சகோதரப்பாசம்

    சகோதரப்பாசம்

    இரண்டு வாரம் முன்பு கொரிய தீபகற்பத்தில் இருக்கும் 'அமைதி கிராமம்' என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் சில முக்கியமான முடிவெடுத்தது. இதற்காக 100க்கும் அதிகமான வடகொரியா தங்கள் நாட்டு வீரர்களை ஏற்கனவே அந்த நாடு அனுப்பியது.

    தடை

    தடை

    50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டை இவ்வளவு நாட்களாக பகையாக இருந்தது. அமெரிக்காவும் இதற்கு எதிராக இருந்தது. இதனால் வடகொரியா மீது பொருளாதார தடை இருக்கிறது. வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனையால் தடை இருக்கிறது.

    பரிசு

    பரிசு

    இந்த ஒலிம்பிக் போட்டியில் வீரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுடன் சில பரிசுகளும் கொடுக்கப்படும். அதன்படி சாம்சங் போன், டிவி, நைகி ஷு, ஆடை எல்லாம் வழங்கப்படும். எல்லா வீரர்களுக்கும் இது கொடுக்கப்படும்.

    வடகொரியா தடை

    வடகொரியா தடை

    ஆனால் வடகொரியா மீது இருக்கும் தடை காரணமாக இந்த பொருட்களை அந்த நாட்டிற்கு வழங்க முடியாது. முக்கியமாக இந்த சிறப்பு பரிசு பொருட்கள் எதையும் அந்த நாட்டிற்கு கொடுக்க முடியாது. இதை தென்கொரிய நாடே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

    மீண்டும்

    மீண்டும்

    இதனால் இந்த இருநாட்டிற்கும் இடையில் பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது. பல நல்ல முயற்சிகள் செய்து தென்கொரியா அமைதியை உருவாக்க முயன்றது. ஆனால் ஐநா விதியால் அந்த அமைதி குலையும் நிலையில் இருக்கிறது.

    English summary
    Though most of the Pyeongchang-bound athletes are set to get freebies including the latest Samsung smartphones and sleek Nike uniforms, the 22 North Korean athletes who will compete in the 2018 Winter Olympics may not be eligible for the same, according to informed sources
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X