For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் வன்முறைக்கு எதிரான போருக்காக.. பெண் உள்ளிட்ட 2 பேருக்கு நோபல் அமைதிப் பரிசு!

அமைதிக்கான நோபல் பரிசினை நதியா முராத், டெனிஸ் முக்வகே ஆகியோர் பெற்றனர்.

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: 2018ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நதியா முராத் மற்றும் டெனிஸ் முக்வகே ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இவர்கள் இருவரும் பாலியல் பலாத்காரக் கொடுமைக்கு எதிராகவும், ஆயுதப் போராட்டங்களுக்கு எதிராக போராடி வருவதற்காகவும், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. போரில் பாலியல் வன்முறைக்கு எதிராக போராடியதற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கடத்தி செல்லப்பட்டவர்

நோபல் பரிசு பெறும் நதியா முராத் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர். யாஸிதி முஸ்லீம் ஆவார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட 3000 யாஸிதி முஸ்லீம் பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.

பாராட்டை பெற்றவர்

பாராட்டை பெற்றவர்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யாஸிதி பெண்களை எந்த அளவுக்கு கொடூரமாக சித்திரவதை செய்தனர், பாலியல் வன்புணர்வு செய்தனர் என்பதற்கு இருக்கும் ஒரு முக்கிய சாட்சி நதியா. தனது துயரங்களை வெளியுலகுக்கு மிகவும் தைரியமாக சொல்லி உலக மக்களின் பாராட்டையும், அன்பையும் பெற்றவர் நதியா.

பாலியலுக்கு எதிரான போராட்டம்

டெனிஸ் முக்வகே, காங்கோ அரசின் கொடூர சட்டங்களை எதிர்த்துப் போராடி வருபவர் ஆவார். காங்கோவில் நடைபெறும் கூட்டு பலாத்கார சம்பவங்களை தடுக்க காங்கோ அரசும், உலக நாடுகளும் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி அதுதொடர்பான பிரசாரங்களையும் அவர் முன்னெடுத்து வருகிறார். காங்கோ பெண்கள் பாலியல் ரீதியாக சந்தித்து வரும் சித்திரவதைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் போராளிதான் முக்வகே.

English summary
Nobel Peace Prize for 2018 to Denis Mukwege and Nadia Murad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X