For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 மாதங்கள்.. முகம் தெரியாத கொடூரர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி.. இது நாதியாவின் கதை!

பாலியல் கொடுமைக்கு ஆளான நாதியாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நாதியாவுக்கு நோபல் பரிசு-வீடியோ

    ஸ்டாக்ஹோம்: பாலியல் அடிமைகளுக்கு மட்டும்தான் தெரியும் தாங்கள் எவ்வளவு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு ஆளானோம் என்று. அப்படித்தான் நாதியாவுக்கும் இருந்திருக்கிறது.

    ஈராக் நாட்டில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர்தான் நாதியா, 21 வயதுடைய இளம் பெண். 2015-ம் ஆண்டு அந்த கிராமத்தில் நுழைந்த ஐஎஸ் தீவிரவாதிகள் நாதியா உள்ளிட்ட பெண்களை சிறைபிடித்தனர். பின்னர் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

    கொடூர வாழ்க்கை

    கொடூர வாழ்க்கை

    அதில் நாதியா, கடத்தி செல்லப்பட்ட அந்த நொடியிலிருந்தே பாலியல் அவமானம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். பாலியல் அடிமையாக 3 மாதங்கள் கொடூர வாழ்க்கையாக அனுபவித்தவர்.

    காமுகர்கள்

    காமுகர்கள்

    நாதியா உள்ளிட்ட பெண்களை கடத்திய ஐஎஸ் தீவிரவாதிகள், மொசூல் என்ற நகருக்கு அந்த தீவிரவாத கும்பல் அழைத்து சென்றது. அடி, உதை, சித்ரவதைகளுடன் இரவெல்லாம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளானார் நாதியா. காமுகர்களின் வெறியாட்டம் நடக்கும்போதெல்லாம் பெரும்பாலும் நாதியா இருந்தது மயக்க நிலையில்தான். ஐ.எஸ். குழுவிடம் ரணகளப்பட்டுவிட்டார் நாதியா.

    தப்பி ஓடினார்

    தப்பி ஓடினார்

    வெறி தீர்ந்த மிருகங்கள், நாதியாவை சேவை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி, வற்புறுத்தி கொடுமைப்படுத்தினர். அவமானங்கள் ஒவ்வொரு இரவாக தொடர்ந்தது. ஒருவழியாக மூன்று மாதங்களின் பின் நாதியா ஐ.எஸ். பிடியில் இருந்து தப்பி ஜெர்மன் ஓடினார்.

    அடியோடு அழிக்க கோரிக்கை

    அடியோடு அழிக்க கோரிக்கை

    ஐநா பாதுகாப்பு சபைக்கே வந்துவிட்டார். அங்கே மனித உரிமைகள் ஆணையத்தில் அதிகாரிகள் கிட்டத்தட்ட 15 பேர் இருந்திருப்பார்கள். தன்னை கடத்தி சீரழித்த அந்த ஐஎஸ் தீவிரவாத குழுவை அடியோடு அழித்து ஒழிக்கும்படி மன்றாடினார். சிறுபான்மை மக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை ஐஎஸ் தீவிரவாதிகள் சூறையாடப்பட்ட பொருட்கள் போன்று விற்பதாக புகார் கூறி என கதறினார்.

    துணிச்சலை பாராட்டினர்

    துணிச்சலை பாராட்டினர்

    இப்படி பாலியல் சித்ரவதைகள் செய்தால், வழக்கமான வாழ்க்கைக்கு கடைசி வரை திரும்ப முடியாமலேயே போய்விடுகிறது என்றும் ஈன குரலில் கூறினார். நாதியா பேச பேச, அவரது துன்பங்களை சொல்ல, சொல்ல, ஐநா அதிகாரிகள் எல்லோருமே அதிர்ச்சி ஆனார்கள். பாதுகாப்பு சபையினர் கண்கள் கலங்கினர். ஆனாலும் நாதியாவின் துணிச்சலை பாராட்ட தவறவில்லை.

    சின்னாபின்ன வாழ்க்கை

    சின்னாபின்ன வாழ்க்கை

    இப்போது இந்த நாதியாவுக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. போரில் பாலியல் வன்கொடுமை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை துணிவுடன் சுட்டிக்காட்டியதுடன் அதற்கு எதிராவும் போராடியதற்காகத்தான் இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அமைதிக்கான விருது நாதியாவுக்கு வழங்குவதில் மகிழ்ச்சிதான் என்றாலும் அந்த 3 மாத நரக பாலியல் நாட்களின்போதே அவரது ஒட்டுமொத்த வாழ்வும் சிதைத்து சின்னாபின்னமாகி விட்டது என்பதை மறுக்க முடியாது.

    English summary
    Nobel Peace Prize for 2018 to Nadia Murad
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X