For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவில் #GoBackModi ... பாகிஸ்தானில் தேங்க்யூ இம்ரான்...டிரெண்டிங்கில் வலம் வந்த ஹேஷ்டேக்

Google Oneindia Tamil News

Recommended Video

    விவிஐபி போல அபிநந்தனை அழைத்து வந்த பாகிஸ்தான் ராணுவம்- வீடியோ

    இஸ்லாமாபாத்:இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தானில் நெட்டிசன்கள் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

    இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமான தாக்குதலில் கமாண்டர் அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். விமானி அபி நந்தனை இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்துவர வேண்டும் என்று உலகம் முழுவதும் குரல்கள் எழுந்தன. இதுதொடர்பான ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகின.

    Nobel peace prize for imran khan becomes top twitter trend in pakistan

    இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் களம் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் என பல நாடுகள் இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டன.

    அபிநந்தனை உடனடியாக பாகிஸ்தான் விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. அதே சமயத்தில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழுவின் முன்னால் பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், மோதலை விரும்பவில்லை, அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப் படுவார் என்று அறிவித்தார்.

    இம்ரான் கானின் அறிவிப்புக்கு அனைத்துத் தரப்பிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. பாகிஸ்தான் மட்டுமல்லாது இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களும் பொதுமக்களும் இம்ரான் கானின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.

    இதனிடையே இம்ரான் கானுக்கு அமைதிக்கான நோபல் விருது அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டின் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், ட்விட்டரில் அதுதொடர்பான ஹேஷ்டேகுகள் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. குறிப்பாக #NobelPeacePrizeForImranKhan, #PakistanLeadsWithPeace மற்றும் #ThankYouImranKhan ஆகிய ஹேஷ்டேகுகள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

    English summary
    Nobel Peace Prize for Imran Khan' becomes top Twitter trend in Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X