For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2019ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. தட்டிச்சென்ற 3 ஆராய்ச்சியாளர்கள்!

2019ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சுவீடன்: 2019ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் உள்ள ஸ்டால்க்கோமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மருத்துவ துறையில் சாதனை, ஆராய்ச்சி செய்யும் ஆரய்ச்சியாளர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.

Nobel Prize 2019 in Physiology or Medicine awarded jointly three persons

இந்த நிலையில் 2019ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் வில்லியம் ஜீ கேலின், சர் பீட்டர் ரேட்கிளிப் , கிரேக் எல் செமன்சா ஆகியோருக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

மனித உடல் செல்கள் குறித்த ஆய்விற்காக மூன்று பேருக்கும் நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது. உடலில் இருக்கும் ஆக்சிஜன் அளவை பொறுத்து உடல் செல்கள் எப்படி மாறுகிறது. ஆக்சிஜன் அதிகம் ஆகும் நேரத்தில் என்ன நடக்கும், குறையும் நேரத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து சோதனை செய்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் என்று கூறுகிறார்கள். உடலுக்கு சிகிச்சையின் போது எவ்வளவு அளிக்க வேண்டும் என்பதை இதில் ஆராய்ந்து உள்ளனர். உடலில் இருக்கும் பல்வேறு திசுக்கள் மற்றும் செல்களில் இந்த சோதனையை செய்து இருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் கேன்சர் சிகிச்சைக்கு இந்த ஆராய்ச்சி உதவும் என்று கூறுகிறார்கள். இதனால் தற்போது இவர்கள் மூவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோபல் பரிசு மூன்று பேருக்கும் சமமாக பிரித்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nobel Prize 2019 in Physiology or Medicine awarded jointly to William G. Kaelin Jr, Sir Peter J. Ratcliffe and Gregg L. Semenza.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X