For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டிஷ் எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: பிரிட்டன் எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி உள்ளிட்ட துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களிப்பை ஆற்றுவோருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

 Nobel prize announced for Literature

இதற்கான தேர்வு குழு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ளது. கடந்த 3 நாள்களாக மருத்துவம், வேதியியல், இயற்பியல் ஆகிய துறைகளுக்கு தலா 3 பேருக்கு நோபல் பரிசு கூட்டாக அறிவிக்கப்பட்டது.

இன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசை நோபல் இலக்கிய தேர்வுக் குழு தலைவர் சாரா டேனியஸ் அறிவித்தார். பிரிட்டனை சேர்ந்த எழுத்தாளர் கசுவோ இசிகுரோவுக்கு நோபல் பரிசும் ரூ.7 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

ஜப்பானில் உள்ள நாகசாகியில் பிறந்த கசுவோ தனது 5ஆவது வயதில் பிரிட்டனில் குடியேறினார். அவர் 8 புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய தி பரிடு ஜியன்ட் என்ற நாவல் நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டது.

இந்த புத்தகத்தில் மறதி, வரலாறு, யதார்த்தமான உண்மை ஆகியவற்றுடன் நமது நினைவுகள் எவ்வாறு தொடர்புடையது என்பதை பற்றி கூறியுள்ளார்.

English summary
Nobel prize for this year for Literature was announced for Laureate Kazuo Ishiguro who is Japanese and then moved to Britain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X