For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முப்பரிமாண மூலக் கூறுகள் பற்றிய ஆய்வு: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு

மூலக் கூறுகள் பற்றிய ஆய்வுக்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் இலக்கியம், மருத்துவம், இயற்பியல், வேதியியல், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பங்களிப்பை ஆற்றுவோருக்கு இந்த பரிசு வழங்கப்படுகிறது.

 Nobel prize awarded for 3 scientists in the field of Chemistry

இதற்கான தேர்வு குழு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ளது. மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியியலுக்கான நோபல் பரிசுக்கான தேர்வு நடைபெற்றது. இதை ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் தேர்வு குழுத் தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார்.

ஜாக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹெண்டர்சன், ஜோசிம் பிராங்க் ஆகிய மூவருக்கும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. ரூ.7 கோடி பரிசுத் தொகையானது மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கும் முப்பரிமாண மூலக் கூறுகள் பற்றிய ஆய்வுக்காக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டும் மூலக் கூறு பற்றிய ஆய்வுக்காக இத்துறையில் நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The 2017 Nobel Prize in Chemistry awarded for Joachim Frank, Jacques Dubochet, Richard Henderson made the technology to portray biomolecules in 3D at atomic level generally applicable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X