For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மருத்துவத் துறைக்கான 2017 நோபல் பரிசு.. அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு!

2017ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஸ்வீடன் : 2017ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் மருத்துவம், கலை, அறிவியல் என்று ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளுக்கான அறிவிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

 Nobel prize for medicine announced today

முதல் நாளான இன்று மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2017 அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் தேர்வுக் குழுவின் செயலாளர் தாமஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி கிர்கார்டியன் ரிதம்(உயிர்க்கடிகாரம்) முறையில் மூலக்கூறுகள் இயக்கம் தொடர்பான ஆய்வுகளை செய்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரி சி. ஹால், மைக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகையான ரூ. 7 கோடி இவர்கள் 3 பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். இதே போன்று நாளை இயற்பியலுக்கான நோபல் பரிசும், நாளை மறுதினம் வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு அக்டோபர் 6ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Nobel prize 2017 announced for 3 Americans who discovered molecular mechanisms controlling the circardian rhythm
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X