For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒபாமாவுக்கு நோபல்... தப்புப் பண்ணிட்டோம் மக்களே... இப்பப் புலம்பும் நோபல் கமிட்டி செயலாளர்

Google Oneindia Tamil News

ஆஸ்லோ: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுத்த முடிவு தவறு என்று முன்னாள் நோபல் கமிட்டி செயலாளர் கெயிர் லுன்டஸ்டாட் கூறியுள்ளார்.

ஒபாமாவுக்கு 2009ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு எதற்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டதோ, அந்த எதிர்பார்ப்பை ஒபாமா நிறைவேற்றவில்லை. அதில் அவர் தோல்வி அடைந்து விட்டார். அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்றும் கெயிர் கூறியுள்ளார்.

Nobel secretary regrets Obama peace prize

கெயிர் தனது சுயசரிதையை எழுதியுள்ளார். அதில்தான் அவர் இப்படிக் கூறியுள்ளார். அவரது நூலிலிருந்து...

ஒபாமாவுக்கு இந்த நோபல் பரிசானது பலம் சேர்க்கும் என்று கருதினோம். ஆனால் அப்படி எதுவுமே நடக்கவில்லை.

அமெரிக்காவிலேயே இந்த முடிவுக்கு கடும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த விருதுக்கு ஒபாமா தகுதி படைத்தவர் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்த பரிசை ஒபாமாவே கூட எதிர்பார்க்கவில்லை. அவருக்கே இது ஆச்சரியம் தந்தது என்பதுதான் உண்மை.

ஒபாமாவுக்குக் கொடுக்கப்பட்ட அமைதிப் பரிசு போல வேறு எந்த பரிசும் இத்தனை கவனத்திற்குள்ளானதில்லை.

ஒபாமா ஆதரவாளர்களும் கூட இது தவறான முடிவு என்றே கருதினர். எனவே அந்த வகையில், இந்த விருதால் என்ன நடக்கும் என்று நினைத்தோமா அது நடக்கவில்லை.

முதலிஸ் விருதைப் பெறுவதற்காக ஆஸ்லோவுக்கு வரவே யோசித்தார் ஒபாமா. வெள்ளை மாளிகையிலிருந்து யாரேனும் இந்த விருதைப் புறக்கணிக்கிறார்களா என்று கூட விசாரித்தனர்.

நேரில் வந்துதான் விருதைப் பெற வேண்டும் என்பதால் வேறு வழியின்றி ஒபாமா நேரில் வந்து விருதைப் பெற்றார் என்று கூறியுள்ளார் கெயிர்.

1990ம் ஆண்டு முதல் 2015 வரை நோபல் கமிட்டி செயலாளர் பதவியில் இருந்தவர் கெயிர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former Nobel secretary has regretted that Obama peace prize is wrong and mistake.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X