For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புற்றுநோய் சிகிச்சையில் புதிய புரட்சி.. நோபல் வென்ற இருவரின் சாதனை! #நோபல்

Google Oneindia Tamil News

Recommended Video

    மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற இருவர்- வீடியோ

    ஸ்டாக்ஹோம்: உலகை பெரிய அளவில் அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தமைக்காக இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசை வென்றுள்ளனர் ஜேம்ஸ் ஆலிசனும், டசகு ஹான்ஜோவும்.

    Nobelprize: Innovative therapy for Cancer

    இவர்கள் இருவரும் ஒரே மாதிரியான சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். அதேசமயம், வேறு வேறு உத்திகளின் மூலமாக.

    ஜேம்ஸ் ஆலிசன் செய்த ஆய்வின் விவரம்: ஒரு குறிப்பிட்ட புரதம்தான் நமது உடலின் நோய் எதிர்ப்பு இயக்கத்தை கட்டுப்படுத்துவதாக (ஒரு பிரேக் போல) கண்டறிந்தார் ஜேம்ஸ் ஆலிசன். இந்த கட்டுப்பாட்டை விலக்குவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்பதை அவர் கண்டறிந்தார். அதற்காக அவர் கண்டறிந்த இன்னொரு வழிதான், நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி விட்டு, அதன் மூலம் இந்த பிரேக்கை விடுவிப்பது. இது சிகிச்சை முறையில் நல்ல பலனைக் கொடுப்பயைும் அவர் தனது ஆய்வின் மூலம் நிரூபித்தார். இதை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையையும் வகுத்தார்.

    மறுபக்கம் டசகு மேற்கொண்ட ஆய்வும் இதேபோலத்தான். நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஒரு புரதத்தை இவர் ஆராய்ந்தார். இந்த புரதம்தான் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி விடாத வகையில் தடுப்பாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார். அதை கட்டுப்படுத்தி, நோய் எதிர்ப்பு செல்களை தூண்டுவிக்கும் முறையை இவர் கண்டறிந்தார். இதுவும் எதிர்பார்த்த நல்ல பலனைக் கொடுத்தது.

    இரு விஞ்ஞானிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆய்வையே மேற்கொண்டிருந்தனர். இதன் காரணமாக இருவரும் மருத்துவத்திற்கான நோபஸ் பரிசைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பலியாகி வருகின்றனர். மனிதகுலத்தின் மிகப் பெரிய சவாலாக புற்றுநோய் உருவெடுத்துள்ளது. நமது நோய் எதிர்ப்பு செல்களைத் தூண்டுவிப்பதன் மூலம் புற்று நோய்க் கட்டிகளை தகர்த்து குணப்படுத்த முடியும் என்ற கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சை மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. இதுவரை இல்லாத புதிய முறையையும் இந்த இரு விஞ்ஞானிகளும் உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆலிசன் தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்டி ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் பணியாற்றி வருகிறார். விஞ்ஞானி டசுகு ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

    English summary
    This year's Nobel prize for Medicine has gone for James Allison and Tasuku Honjo for their Innovative therapy for Cancer .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X