For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னொரு நாட்டை ஆக்கிரமித்தால் அழிவு நிச்சயம்.. 2ஆவது உலக போரை சீனாவுக்கு நினைவுப்படுத்திய இந்தியா

Google Oneindia Tamil News

மாஸ்கோ: அமைதி நிலவ வேண்டுமானால் ஆக்கிரமிப்புகள் கூடாது என மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் மாநாட்டில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமர்சித்தார்.

Recommended Video

    China அமைச்சருடன் Rajnath Singh என்ன பேசினார்? | India China Border Issue | Oneindia Tamil

    இந்தியா- சீனா இடையே கிழக்கு லடாக்கில் மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் ராஜ்நாத் சிங், ஷாங்காய் மாநாட்டில் சீன அமைச்சர் முன்னிலையில் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்தியா சீனா இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் சீனா இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 20 வீரர்கள் வீரமரணமடைந்தார்கள். இந்தியா பதிலடி கொடுத்ததில் சீனா தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    மாஸ்கோவில் நடந்த மறக்க முடியாத மாற்றங்கள்.. சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் பேசியது என்ன?மாஸ்கோவில் நடந்த மறக்க முடியாத மாற்றங்கள்.. சீன பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் பேசியது என்ன?

    சீன படைகள்

    சீன படைகள்

    இந்த சம்பவத்திற்கு பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் லடாக் எல்லையில் சீன படைகள் வாபஸ் வாங்கின. எனினும் சில பகுதிகளில் சீன படைகளை வாபஸ் வாங்க அந்நாட்டு ராணுவம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 30-ஆம் தேதி பாங்காங் திசோ ஏரி பகுதியில் தெற்கு கரையில் சீனா மூன்று முறை ஊடுருவியது. எனினும் அதை இந்தியா முறியடித்தது.

    உலக மக்கள் தொகை

    உலக மக்கள் தொகை

    இந்த நிலையில் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். சீனா உள்பட 8 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இந்த மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசுகையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள 8 நாடுகளில் உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் ஆவர்.

    ஸ்திரத்தன்மை

    ஸ்திரத்தன்மை

    இத்தகைய நாடுகளில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பும் நிலவ வேண்டும். அவை நிலவ வேண்டுமானால் நம்பிக்கை, ஒத்துழைப்பு, ஆக்கிரமிப்பு இல்லாதது, சர்வதேச விதிகளை மதித்தல், கருத்து வேறுபாடுகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுதல், மற்றவர்களின் நலன்களை மதித்தல் ஆகியவை அவசியமாகும்.

    இந்தியா கண்டிப்பு

    இந்தியா கண்டிப்பு

    பயங்கரவாதத்தை செய்பவர்களையும் அதை தூண்டுபவர்களையும் இந்தியா எந்த வித பாரபட்சமின்றி இந்தியா கண்டிக்கிறது. இந்த ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்து 75 ஆவது ஆண்டாகும். ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆக்கிரமித்தால் அழிவு ஏற்படும் என்பது இதன் மூலம் நமக்கு கற்றுக் கொள்ள வேண்டும்.

    அமைதி

    அமைதி

    அது ஐநா சபை உருவாக்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்த நேரத்தில் உலகம் அமைதியாக இருக்க சர்வதேச விதிகளையும் இறையாண்மையையும் நாடுகள் மதித்து மற்ற நாடுகளை ஆக்கிரமித்தலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என ராஜ்நாத் சிங் பேசினார். இந்தியா- சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் சீன அமைச்சர் முன்பு ராஜ்நாத் சிங் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    English summary
    Non aggression is important for peace, says Rajnath Singh. He also shares the memories of second world war which leads to destruction.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X