For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலேசியாவில் கைதான பாகிஸ்தான் உளவாளியை சென்னை கொண்டுவர நடவடிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவாளி முகமது ஹுசைனிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியான ஜாகிர் ஹுசைனின் நண்பரான முகமது ஹுசைனி மலேசிய போலீசாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கியூ பிரிவு போலீசார் முடிவுசெய்தனர். இதையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் முகமது ஹுசைனிக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த பிடியாணை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய அம்சங்கள் குறித்தும்,முகம்மது ஹுசைனியிடம் ஏன் விசாரணை நடத்த வேண்டும் என்ற விபரங்கள் அடங்கிய ஆவணங்களும் உள்துறை அமைச்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

English summary
A city court on Tuesday issued a non-bailable warrant against Inter-Services Intelligence (ISI) agent Zakir Hussain’s aide and another terror suspect who was arrested by the Malaysian police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X