For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அட... கடவுள் இப்படிதான் இருப்பாரா? விஞ்ஞானிகள் உருவாக்கிய உருவம்!

கடவுள் இப்படிதான் இருப்பார் என வட கரோலினா விஞ்ஞானிகள் ஒரு உருவத்தை உருவாக்கியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விஞ்ஞானிகள் உருவாக்கிய கடவுளின் உருவம்!-வீடியோ

    கடவுள் இப்படிதான் இருப்பார் என வட கரோலினா விஞ்ஞானிகள் ஒரு உருவத்தை உருவாக்கியுள்ளனர்.

    உலகில் உள்ள ஒவ்வொரு தரப்பு மக்களும் கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என ஐம்பூதங்களையும் ஏதோ ஒரு வடிவத்திலும் வடிவம் இல்லாமலும் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடவுள் எப்படி இருப்பார் என வட கரோலினாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

    இளம் வயதினரை போல்

    இளம் வயதினரை போல்

    கடவுள் இப்படிதான் இருப்பார் என்றும் விஞ்ஞானிகள் கடவுளுக்கு உருவம் ஒன்றையும் கொடுத்துள்ளனர். கடவுள் பழையகாலத்து மனிதரை போலவும் முகம் இளம்வயதினரை போலவும் இருப்பதாக அந்த உருவம் உள்ளது.

    உளவியலாளர்கள் குழு

    உளவியலாளர்கள் குழு

    சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த கடவுளின் ஓவியத்தை உருவாக்கியது.

    ஒவ்வொரு ஜோடியிலிருந்தும்

    ஒவ்வொரு ஜோடியிலிருந்தும்

    இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.

    பிரதிபலிக்கும் முகம்

    பிரதிபலிக்கும் முகம்

    தேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுள் எவ்வாறு இருக்க வேண்டும் என நினைத்தார்களோ அதை பிரதிபலிக்கும் ஒரு முகத்தை உருவாக்கினர். அவர்களின் முடிவு ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.

    மோனலிசா ஓவியம் போல்

    மோனலிசா ஓவியம் போல்

    அதாவது வெள்ளைத் தோலுடன் இளமையாக சுத்தமாக ஷேவ் செய்து 80களில் உள்ள பையனை போன்று உள்ளது கடவுளின் உருவம். இந்த கடவுளின் எக்ஸ்பிரஷன் மோனலிசாவின் சிரிக்கும் ஓவியத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

    அன்பு மிகுந்தவர்

    அன்பு மிகுந்தவர்

    லிபரல்ஸ் கடவுள் பெண்மை நிறைந்தவராகவும் இளமையானவராகவும், அன்பு மிகுந்தவராகவும் இருப்பார் என கற்பனை செய்திருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.மேலும் இந்த ஆய்வுப் புள்ளிவிவரங்களின் படி ஒவ்வொரு நாட்டு மக்களும் எப்படி கடவுளை கற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

    கருப்பு நிற கடவுள்

    கருப்பு நிற கடவுள்

    அதாவது கவுகேஸியன்ஸ் வெள்ளைநிறத்தில் கடவுளை கற்பனை செய்துள்ளனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கருப்பு நிற கடவுளை கற்பனை செய்துள்ளனர். இளையவர்கள் ஒரு இளம் கடவுளை கற்பனை செய்துள்ளார்கள்.

    ஆண்மையுள்ள தேவன்

    ஆண்மையுள்ள தேவன்

    கவர்ச்சிகரமான மக்கள் மிகவும் கவர்ச்சிகரமான கடவுளை கற்பனை செய்துள்ளனர். "ஆண்களும் பெண்களும் சமமாக ஆண்மையுள்ள தேவனாக கடவுளை நம்புகிறார்கள்" என்று அந்த ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    English summary
    North Karolina university scientists creates gods image. The end result is a mugshot that shows God is white, young and clean cut, not unlike someone from an 80s boy band.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X