For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"சூப்பர்.. அருமையா பண்ணிட்டீங்க" சீன அதிபருக்கு கிம் அனுப்பிய திடீர் கடிதம்.. புதிய பரபரப்பு

சீன அதிபருக்கு திடீர் கடிதம் வந்ததால் பிதிய பரபரப்பு ஏற்பட்டது

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை..அவர் இருக்கிறாரா இல்லையா என்பதே சமீபத்தில் பெரிய பரபரப்பாகி விட்டது. இந்த நிலையில் புதிய பஞ்சாயத்தைக் கிளப்பியுள்ளார் கிம் ஜாங் உன்.

Recommended Video

    Kim sends letter to China's Xi | சீன அதிபருக்குவட கொரிய கிம் அனுப்பிய திடீர் கடிதம்..

    சீன அதிபர் ஜி ஜின் பிங்குக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார் கிம் ஜாங் உன். இதுதான் இப்போது வைரலாகியுள்ளது. ஊரே அவர் இருக்காரா இல்லையான்னு கேட்டுக் கொண்டிருக்கும் போது அவர் கடிதம் அனுப்பியதாக வந்த செய்தியால் புதிய பரபரப்பு உண்டாகி விட்டது.

    North Koran leader dashes sudden letter to china president

    அதை விட அப்படி என்னதான் கடிதம் மூலம் தெரிவித்திருப்பார் கிம் என்ற கேள்வியும் எழுகிறது வட கொரியாவைப் பொறுத்தவரை அந்த நாடு நம்பும் ஒரே நண்பன் சீனாதான். இதனால்தான் இந்தக் கடிதம் எதிர்பார்ப்பைக் கிளறி விட்டு விட்டது.

    ஆனால் தனது கடிதத்தில் சீன அதிபரைப் பாராட்டியுள்ளாராம் கிம் ஜாங் உன். அதாவது கொரோனாவைரஸ் தாக்கம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்ட போதிலும், அதை சிறப்பாக கட்டுப்படுத்தியதற்காக சீன அதிபரைப் பாராட்டியுள்ளாராம் கிம் ஜாங் உன். சீனாவின் பேருதவிதான் வட கொரியாவை உயிர்ப்புடன் வைத்துள்ளது. எனவே சீனாவுக்கு ஒரு பாதிப்பு என்றால் அது வட கொரியாவுக்கும் சேர்த்துதான் என்பதால் கொரோனா குறித்து வட கொரியாவும் கவலைப்பட்டது.

    ஆனால் சீனா இந்த சவாலை முறியடித்து கொரோனாவை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரியாமல் பார்த்துக் கொண்டதால் கிம்முக்கு நிம்மதியாகி விட்டதாம். உடனேதான் குஷியில் கடிதம் எழுதி போஸ்ட் செய்து விட்டார் இந்த மர்ம மனிதர்! பல காலமாகே சீனாவை நம்பியிருக்கிறது வட கொரியா. பொருளாதார ரீதியில் உலக நாடுகள் வட கொரியாவை முடக்கினாலும் கூட சீனா கை கொடுத்தும், காசு கொடுத்தும் உதவுகிறது.

    இதேபோல ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார் "தம்பி" கிம். அந்தக் கடிதத்தில் 2ம் உலகப் போரில் கூட்டுப் படையினருக்கு வெற்றி கிடைத்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். கூடவே கொரோனாவைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கவும் வாழ்த்தியுள்ளார்.

    இதுதொடர்பாக வட கொரிய செய்தி நிறுவனம் கூறுகையில், ரஷ்ய அதிபரையும், மக்களையும் வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார் அதிபர் கிம். சக்தி வாய்ந்த ரஷ்யாவை உருவாக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க அவர் அதில் வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனாவைரஸுக்கு எதிரான போரிலும் ரஷ்யா வெல்லட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    English summary
    North Koran leader dashes sudden letter to china presiden
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X