For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்காளிடா.. தென் கொரியாவுக்காக தனது நேர மண்டலத்தையே மாற்றிய வட கொரியா! 'குழந்தை சாமி' அதிரடி

கிம் - மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் நேர மண்டல மாற்றம். தென்கொரியா மற்றும் வடகொரியா நடுவே அரை மணி நேரம் வித்தியாசம் இருந்து வந்தது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    தென் கொரியாவுக்காக தனது நேர மண்டலத்தை வட கொரியா மாற்றியமைத்துள்ளது

    பியாங்யன்ங்: தென் கொரியாவுக்காக தனது நேர மண்டலத்தை வட கொரியா மாற்றியமைத்துள்ளது.

    இந்தியா-பாகிஸ்தான் போல வட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்தது 65 ஆண்டு கால பகை. ஆனால், இந்த பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. காரணம், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய அதிபர் மூன் ஜேஇன் ஆகியோரின் சந்திப்பும், அதையடுத்து நடந்த பேச்சுவார்த்தைகளும்தான்.

    North Korea changes its time zone to match South- Reports

    மற்றொரு பகை நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பையும் கிம் ஜாங் உன் விரைவில் சந்தித்து பேச இருக்கிறார். அப்போது அந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கலாம்.

    கிம் - மூன் சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றுதான் நேர மண்டல மாற்றம். தென்கொரியா மற்றும் வடகொரியா நடுவே அரை மணி நேரம் வித்தியாசம் இருந்து வந்தது. இந்தியா-பாகிஸ்தானிலும் இதேபோன்ற நிலைதான் உள்ளது.

    ஆனால் பேச்சு வார்த்தையின்போது, வடகொரியா தனக்கென இருந்த நேர மண்டலத்தை விட்டுக்கொடுத்துள்ளது. தென்கொரிய நேரத்திற்கு இணையாக, வடகொரிய நேரம் அரை மணிநேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    நேற்று நள்ளிரவு முதல் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவை விட பாகிஸ்தான் அரை மணி நேரம் தாமதமான நேர மண்டலத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் காலை 6 மணி என்றால், அப்போதுதான் பாகிஸ்தானில் 5.30 மணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    North Korea has changed time zone to match the South after last week's inter-Korean summit, according to state media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X