For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிம் ஜாங் உன் என்னதான் ஆனாரு?.. முக்கிய அறிவிப்புக்கு தயாராகிறது வடகொரியா?

Google Oneindia Tamil News

பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்பாக சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட அந்நாட்டு அதிகாரிகள் தயாராகி வருவதாக ஒரு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கசிந்தது கிம் ஜோங் உன் எழுதிய கடிதம்... புது திருப்பம்

    36 வயதான கிம் ஜாங் உன் கடந்த 15-ஆம் தேதி முதல் அவர் பொது வெளியில் காணவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவி வருகின்றன. அவர் இறந்துவிட்டார் என சிலர் கூறுகின்றனர்.

    இது போல் கடந்த 2014 ஆம் ஆண்டும் இவர் ஒரு மாதத்திற்கு காணாமல் போனார் அப்போதும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவே கூறப்பட்டது. எனினும் அவர் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் மக்கள் முன் தோன்றினார்.

    கிம் எப்படி இருக்காருன்னு டிரம்ப்புக்கு நல்லா தெரியுமாம்.. ஆனால் வெளியில் சொல்ல மாட்டாராம்! கிம் எப்படி இருக்காருன்னு டிரம்ப்புக்கு நல்லா தெரியுமாம்.. ஆனால் வெளியில் சொல்ல மாட்டாராம்!

    ஏற்பாடுகள்

    ஏற்பாடுகள்

    இந்த நிலையில் வடகொரியாவில் 10-க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஒரு செய்தியாளர், கிம் ஜாங் உன் இறந்து விட்டதாக கூறுகிறார். அவரது மரணத்தால் வட கொரிய தலைவர்கள் அதிர்ச்சியும், பதட்டமும் அடைந்துள்ளனர். அவரது இறப்பு குறித்து அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு உணர்வற்ற நிலைக்கு சென்றுவிட்டார் என்றும் அவரை மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துவிட்டதாக அந்த செய்தியாளர் கூறியுள்ளார்.

    தாமதம்

    தாமதம்

    மேலும் அவரது தந்தை இறந்த போது அவரது உடல் வைக்கப்பட்ட வண்டி பொது வெளியில் வைக்கப்பட்டுள்ளது. எனவே கிம் இறந்த செய்தியை அறிவிக்க அந்நாடு தயாராகி வருவதாகவே தெரிகிறது என அந்த செய்தியாளர் தெரிவித்தார். இந்த அறிவிப்புகளில் சிறிது தாமதமாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆச்சரியம்

    ஆச்சரியம்

    அது போல் தனக்கு பிறகு வடகொரியாவை தனது தங்கைதான் ஆள வேண்டும் என கிம் ஜாங் உன் விரும்பியதாகவும் கிம் ஏற்கனே கூறியுள்ளதாகவும் இந்த செய்தியாளர் கூறுகிறார். கிம்மை விட 4 வயது சிறியவரான கிம் யோ ஜாங், கிம்முடன் பெரும்பாலான நிகழ்வுகளில் உடனிருந்துள்ளார். எனினும் ஒரு பெண்ணை தலைவராக மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    English summary
    North Korea Leader Kim Jong Un chiefs prepare for key announcement?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X