For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காண்ணா பார்த்தீங்களா.. இன்னொரு மிஸ்ஸைல்.. எப்பூடி.. டென்ஷனைக் கிளப்பிய வடகொரியா

Google Oneindia Tamil News

பியாங்யாங்: அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதையடுத்து அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. மேலும் அணு ஆயுத சோதனையை நிறுத்துமாறு வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வந்தது.

North Korea conducts missile test again

இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் மீண்டும் சந்திப்பு நடைபெற்றது.

எனினும் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டது. இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

North Korea conducts missile test again

வடகொரியா இரண்டு குறைந்த தூர ஏவுகணைகள், அதாவது 420 கி.மீ. தூரத்தில் ஒன்றும் 270 கி.மீ.தூரத்தில் ஒன்றும் சோதனை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. சினோரி ஏவுதளத்தில் இருந்து ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டது.

அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

English summary
South Korea says that North Korea conducted two short range missiles test.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X