For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணுஆயுத சோதனைக்கு என்ட் கார்டு போட்ட வடகொரியா... 'மகிழ்ச்சி' என ட்ரம்ப் வரவேற்பு!

அணுஆயுத சோதனைகளை நிறுத்திக்கொள்வதாக வடகொரியா ஒப்புதல் தெரிவித்துள்ளதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்பு அளித்துள்ளார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

வாஷிங்டன் : அணுஆயுதங்கள் மூலம் அண்டை நாடுகளை மிரட்டி வந்த குட்டி நாடான வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரவேற்றுள்ளார்.

அளவில் சிறிய நாடாக இருந்தாலும் வடகொரிய தன்னிடம் இருந்த அணுஆயுதங்களை வைத்து சோதனை நடத்தி அமெரிக்காவை மிரட்டி வந்தது. அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை மிரட்டிக்கொண்டு இருந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக தென்கொரியாவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்க தொடங்கிய வடகொரியா, அமெரிக்காவுடன் நேரடியாக பேசுவதற்கும் ஆர்வம் காட்டியது.

North Korea decides to suspend nuclear and missile testing

வடகொரியாவின் இந்த முடிவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடம் தென்கொரியா தெரிவித்தது. இதனையடுத்து அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். கிம் ஜாங் உன் மற்றும் ட்ரம்ப்பின் சந்திப்பு ஜூன் மாதத்திற்குள்ளாக நடக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்காவுடன் நட்பு பாராட்டும் வகையில் வடகொரியா நெருங்கி வரும் நிலையில், அணு ஆயுத சோதனை, கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய ஏவுகணையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. சனிக்கிழமை முதல் அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ கொரிய செய்தி ஏஜென்சி இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது. வட்கொரியா தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளதாகவும் வடகொரியா கூறியுள்ளது.

அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரவேற்பு தெரிவித்து உள்ளார். கிம் ஜாங் உன்னின் அறிவிப்பு வடகொரியாவுக்கு மட்டும் இல்லாது உலக வளர்ச்சிக்கு உதவும் என்று டிரம்ப் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளார்.

English summary
North Korea has put out a statement saying that it has suspended nuclear and long-range missile tests and plans to close its nuclear test site on Saturday, US President Trump welcomed the announcement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X