For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனா இருக்குது.. குளிக்கவா போன.. டுமீல்.. சுட்டுக் கொன்ற வட கொரியா.. வெளியான பரபரப்பு தகவல்

Google Oneindia Tamil News

பியோங்யாங்: வடகொரியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் செய்துவருகிறார். அது மிக மோசமான அளவுக்கு சென்று கொண்டிருப்பதாக அங்குள்ள ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    கொரோனா கொடுமை... கர்நாடகாவில் அதிரடி உத்தரவு

    சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது அனைவரும் அறிந்ததுதான். எனவே சீனா உள்ளிட்ட வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவோரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது வடகொரியா.

    இப்படித்தான் ஒரு, அரசு வணிக அலுவலர் ஒருவரையும் தனிமைப்படுத்தி கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது அந்த நாட்டு அரசு. ஆனால் அவர் முன்னறிவிப்பு இன்றி வெளியில், சென்றதாகவும், அங்கே பொதுமக்கள் கூட கூடிய இடத்தில் தண்ணீரில் குளித்ததாகவும் கூறப்படுகிறது.

    ஊடக செய்தி

    ஊடக செய்தி

    இதை அறிந்து அதிபரின் கவனத்திற்கு இந்த சம்பவம் கொண்டு செல்லப்பட்டதாகவும்., அதிகாரிகள் உடனே அவரை கைது செய்து சுட்டுக் கொன்று விட்டதாகவும் Dong-a Ilbo மற்றும் டெய்லி மெயில் ஆகிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ராணுவ கட்டுக்கோப்புடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஏற்கனவே கிம் ஜாங் உன் அறிவித்து உள்ளார். அதன் ஒரு பகுதியாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    பல முன்னுதாரணங்கள்

    பல முன்னுதாரணங்கள்

    குழந்தை முகத்தில் இருக்கும் கிம் ஜாங் உன் இவ்வாறு கொடூரமான முடிவுகளை எடுப்பது இது ஒன்றும் புதிது கிடையாது. ஏற்கெனவே பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. 2014 ஆம் ஆண்டில் முன்னாள் துணை பொது பாதுகாப்பு அமைச்சர் ஓ சாங்-ஹான் கொல்லப்பட்டார். விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைப் பயன்படுத்தி கிம் ஜாங் உன் பல அதிகாரிகளை கொன்றுள்ளார் என்றும் தகவல்ல வெளியானது.

    பிழைக்க வேண்டும்

    பிழைக்க வேண்டும்

    ஆனால் வட கொரியாவில் அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டனர் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள் வெளியாவதும், அதில் பல தவறான தகவல் என்பது பிறகு வெளிச்சத்துக்கு வருவதும், கடந்த காலங்களில் நடந்துள்ளது. எனவே, இப்போது வெளியான தகவலும் வதந்தியாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த நாட்டு மக்கள்.

    தென் கொரியா வேற மாதிரி

    தென் கொரியா வேற மாதிரி

    வட கொரியா, நாட்டு எல்லைக்குள் கொரோனா வைரஸ் தொடர்பான எந்த பாதிப்பும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை, பியோங்யாங்கில் உள்ள உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் குறித்து தங்களுக்குத் தெரியாது என்று கூறுகின்றனர். இருப்பினும், சில தென் கொரிய ஊடகங்கள் கொரோனா வைரஸால், வட கொரியாவில் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.

    English summary
    North Korea executing coronavirus patient, says local medias.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X