• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வட கொரியாவில் அதிகரித்து வரும் வைரஸ்.. மிக மோசமான நிலை ஏற்படலாம் என அச்சம்

|

சியோல்: வட கொரியா ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் கேசோங் நகரத்தை தனிமைப்படுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் கவலைகள் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்டுள்ள அந்த தெற்கு எல்லையோர உணவு மற்றும் பிற உதவிகளை வடகொரியா அரசு அனுப்பி வருகிறது. இதனால் வடகொரியாவில் கொரோனோவே இல்லை என்று கூறிவந்தது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று சர்வதேச வல்லுநர்கள் தெரிவித்தனர்.

வடகொரியா மூடப்பட்ட ஒரு மர்ம தேசமாக திகழ்கிறது. அங்கு என்ன நடக்கிறது என்பதையோ அல்லது அங்குள்ள அவல நிலைகள் குறித்தோ இதுவரை எந்த தகவலும் வெளியாவது இல்லை. அந்த அளவிற்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எல்லைகள் மூடப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களும் சுதந்திரமாக எதையும் வெளியில் சொல்லிவிட முடியாது. இதனால் கொரோனா பரவவில்லை என்று வடகொரியா சொல்லி வருவது குறித்து உலக நாடுகள் ஆரம்பம் முதலே சந்தேகத்தில் இருக்கின்றன,

இந்நிலையில் தென் கொரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள கேசோங் நகரில் கோவிட் -19 அறிகுறிகளைக் கொண்ட ஒருவரைக் கண்டறிந்த பின்னர் வைரஸ் பரவாமல் இருக்க.
ஜூலை பிற்பகுதியில், வட கொரியா "அதிகபட்ச அவசரகால நிலையை" திணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

வேண்டாம் இனி ஹிரோஷிமா, நாகசாகி.. அமெரிக்க வன்மம்.. 75 ஆண்டுகள் கரைந்தது.. ஜப்பானின் சோகம்! வேண்டாம் இனி ஹிரோஷிமா, நாகசாகி.. அமெரிக்க வன்மம்.. 75 ஆண்டுகள் கரைந்தது.. ஜப்பானின் சோகம்!

கேசோங் நகரம்

கேசோங் நகரம்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், கொரோனா தொற்றுடன் ஒருவர் கண்டறியப்பட்ட பின்னர் கேசோங்கை முற்றிலுமாக பூட்டுமாறு உத்தரவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, மேலும் சந்தேகத்திற்கிடமான தொற்று பாதித்த வட கொரியர், கடந்த மாதம் மீண்டும் கெசோங்கிற்குள் நுழைவதற்கு முன்பு தென் கொரியாவுக்கு தப்பிச் சென்றவர் என்றும் வட கொரியா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகம் அதிகரிப்பு

சந்தேகம் அதிகரிப்பு

இதன் மூலம் வட கொரியா தனது முதல் கொரோனா பாதிப்பை பகிரங்கமாக ஒப்புக் கொண்டது. சீனாவுடனான நீண்ட, நுண்ணிய எல்லை, வைரஸ் தோன்றிய இடங்கள் மற்றும் கடந்தகால நோய் பரவல்களை மறைத்த வரலாறு ஆகியவற்றின் காரணமாக, வட கொரியாவில் கொரோனா இதுவரை பரவாமல் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று வெளிநாட்டு வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர்.

எவ்வளவு பேர் தனிமை

எவ்வளவு பேர் தனிமை

இந்நிலையில் உலக சுகாதார அமைப்புக்கு வட கொரியா அளித்த அறிக்கையில்,, கேசோங் நகரில் தொற்று பாதித்தவரின் 64 முதல் தொடர்புகளையும், அரசு நடத்தும் வசதிகளில் 3,571 இரண்டாம் நிலை தொடர்புகளையும் 40 நாட்களுக்கு தனிமைப்படுத்தியுள்ளதாக வடகொரியாவின் உலக சுகாதார பிரதிநிதி டாக்டர் எட்வின் சால்வடோர் தெரிவித்துள்ளார்.

தெரிவித்துவிட்டோம்

தெரிவித்துவிட்டோம்

டாக்டர் எட்வின் சால்வடோர் இது தொடர்பாக அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், சந்தேகத்திற்குரிய முதல் கேஸை, வட கொரியா உலக சுகாதார அமைப்புக்கு தெரிவித்தது, அந்த நபர் கோவிட் -19 க்கு பரிசோதிக்கப்பட்டார், ஆனால் முடிவுகள் முடிவில்லாதவை என்றும் கூறினார். அந்த நபரைப் பற்றிய கூடுதல் தகவல்களை வட கொரியா பகிர்ந்து கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது என சால்வடோர் கூறினார்.

முககவசம் கட்டாயம்

முககவசம் கட்டாயம்

சால்வடார் மேலும் கூறுகையில் வட கொரியாவின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன, குழு கூட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன, முககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாலர் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் கோடைவிடுமுறை காரணமாக மூடப்பட்டு உள்ளன. டிசம்பர் மாத இறுதியில் இருந்து, வட கொரியா 25,905 பேரை தனிமைப்படுத்தி விடுவித்துள்ளது, அவர்களில் 382 பேர் வெளிநாட்டினர் என்று சால்வடார் தெரிவித்தார்

மறைக்கும் வடகொரியா

மறைக்கும் வடகொரியா

டிசம்பர் மாதத்தில் சீனாவில் உலகின் முதல் அறியப்பட்ட வைரஸ் வழக்குகள் பதிவாகிய சில வாரங்களுக்குப் பிறகு, அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவுடனான அதன் எல்லையை மூடியதால், வைரஸ் ஏற்கனவே வட கொரியாவிற்குள் நுழைந்துள்ளது. சியோலில் உள்ள கண்காணிப்புக் குழுக்கள் வட கொரிய வைரஸ் கேஸ்கள் மற்றும் இறப்புகள் குறித்து உறுதியாக அறிக்கையை வெளியிட்டுள்ளன.

மருத்துவ வசதியும் இல்லை

மருத்துவ வசதியும் இல்லை

வட கொரியாவில் உள்ள மோசமான பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததால் ஒரு பெரிய கொரோனா வைரஸ் வெடிப்பு மனிதாபிமானமற்ற வகையில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும். ஆனால் வட கொரியாவின் தற்போதைய நிலைமை எவ்வளவு தீவிரமானது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
"மிகவும் விரிவான தொற்று வெடிப்பு இன்னும் ஏற்படவில்லை என்றாலும், கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்" என்று சியோலின் கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனில் ஆய்வாளர் ஹாங் மின் கூறினார்.

பாதிக்கப்பட்ட நகரம்

பாதிக்கப்பட்ட நகரம்

வட கொரியாவின் அரசு ஊடகங்கள் அண்மையில் வைரஸ் தடுப்புப் பணிக்காக "அனைத்து மக்களுக்கு விழிப்புணர்வு" என்று விவரிக்கும் பிரச்சாரங்களுடன் மிகப்பெரிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன, வட கொரியா அதிக சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொருட்களை பாதிக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது., மேலும் வைரஸ் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துகிறது என்று அரசு ஊடகங்கள் தெரிவித்தன. 550,000 உதவி பொருட்கள் கைசோங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பொய் சொல்கிறது

பொய் சொல்கிறது

இதனிடையே சந்தேகத்திற்கிடமான கேசோங் கேஸ் தென் கொரியாவில் இருந்த வந்த ஒருவர் என்று கூறி தன்னை காப்பாற்ற வடகொரியாக விரும்புகிறது என்று தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது. தென் கொரியாவில் கிம் என்ற குடும்பப்பெயர் கொண்ட 24 வயது இளைஞர் முதல் முதலாக கொரோனாவால் வடகொரியாவில் பாதிக்கப்பட்டதை வடகொரியா கூறியுள்ள நிலையில், அவர், தென் கொரியாவில் சோதனை செய்யவில்லை, எந்தவொரு நோயாளியுடனும் ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்று தென் கொரிய சுகாதார அதிகாரி யூன் டேஹோ திட்டவட்டமாக மறுத்தார். அவர் வட கொரியாவுக்கு திரும்புவதற்கான நோக்கம் அறியப்படவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக கடந்த 22 ஆண்டுகளில் 33,000 க்கும் மேற்பட்ட வட கொரியர்கள் தென் கொரியாவுக்கு தப்பித்துள்ளனர், ஆனால் ஒரு சிலரே வட கொரியாவுக்கு திரும்பியுள்ளனர் என்றார்.

English summary
North Korea imposed "maximum emergency system" to guard against the virus spreading. quarantining thousands of people and shipping food and other aid to a southern city locked down over coronavirus worries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X