For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடடே.. தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த வடகொரியா

தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அடுத்த வாரம் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சியோல்: உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பிற்கு உள்ளான நாடு வடகொரியா என்றால் அது மிகையாகாது. கடந்த ஆண்டில் தொடர்ந்து பல்வேறு ஆணு ஆயுத சோதனைகளை நடத்திய ஐநா சபை மற்றும் அமெரிக்காவின் பல்வேறு எதிர்ப்புகளை வடகொரியா சம்பாதித்தது.

இந்நிலையில் ஏவுகணை சோதனை மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதனை செய்ததால் உலகப்போர் மூன்றுக்கு வடகொரியாவே காரணமாக இருக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. இதனால் அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன.

North Korea is accepts to have bilateral talks with SK

இந்நிலையில் புத்தாண்டு அன்று தொலைக்கட்சியில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு வடகொரியா கலந்துக்கொள்ளும் என்றும் விரைவில் வடகொரியா அணி தென்கொரியாவுக்கு அனுப்பப்படும் என்றும் கூறினார்.

வடகொரிய அதிபரின் அறிவிப்பை அடுத்து, ''பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தென்கொரியா அழைப்பு விடுத்துள்ளது. அடுத்த வாரம் செவ்வாய் கிழமை பன்முன்ஜம் பகுதியில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இரு கொரிய நாடுகளும் பிரிந்துள்ளதால் தான் பிற மேற்கத்திய நாடுகள் அங்கு வந்து பஞ்சாயத்து செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த இருநாடுகளும் சேர்ந்து விட்டால் ஆசியா கண்டத்திலேயே மிக சக்தி வாய்ந்த நாடாக கொரியா உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. பாதுகாப்பு படையில் பலம் வாய்ந்த வடகொரியாவும், தொழில்நுட்பம் மற்றும் முன்னேற்றங்களில் பலம் வாய்ந்த தென்கொரியாவும் சேரக்கூடாது என்பதில் அமெரிக்கா தெளிவாக உள்ளதாக கருதப்படுகிறது.

English summary
North korea is accepts to have bilateral talks with SK. In the Newyear message north Korean president kim jung un said, there sports team will participate in the South korean winter olympics. And as a result South korea has called for a bilateral talks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X