For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட கொரியாவில் என்னப்பா நடக்குது.. "கோமா"வுக்கு போய்ட்டார்னு சொன்னாங்க.. திரும்ப வந்துட்டாரே கிம்!

கோமாவில் இருப்பதாக சொல்லப்பட்ட வடகொரிய அதிபர், அதிகாரிகளுடன் மீட்டிங் நடத்தி உள்ளார்

Google Oneindia Tamil News

பயோங்யாங்: "இவரா கோமாவில் போனவர்" என்று ஆச்சரியத்துடன் கிம் ஜாங் போட்டோவை உலக மக்கள் பார்த்து வருகிறார்கள்.. கோமாவுக்கே வடகொரிய அதிபர் கிம் ஜாங் போய்விட்டதாகவும், அதனால், வடகொரியாவின் அனைத்து அரசுப் பொறுப்புகளும் (தேசியம் மற்றும் சர்வதேசம் உட்பட) அவரது சகோதரியான கிம் யோ ஜாங்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டில் இருந்து தகவல்கள் வெளியானது. ஆனால் "நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்பது மாதிரி, கிம் ஜாங் உட்கார்ந்து மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ள போட்டோக்கள் வெளியாகி உள்ளன.

வடகொரியாவில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.. ஒருசில மாதங்கள் முன்பிருந்தே வடகொரிய அதிபர் கிம்ஜோங் பற்றின தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது.. நடுவில் அது இல்லாமலும் இருந்தது.. அதற்கு பதிலாக பெருவெள்ளம் ஒன்று வடகொரியாவை சூழ்ந்தன.. கொரோனா தொற்றும் அதிகமாகிவிட்டது.. அதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் படுமோசமானது.

இதையொட்டி உணவு பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.. அதனால், வேறு வழியில்லாமலும் நிலைமையை சமாளிக்கவும், தன் உடன்பிறந்த தங்கை கிம் யோ-விடம் கொஞ்சம் அதிகாரத்தை பிரித்து தரலாம் என்ற முடிவுக்கு வந்ததாகவும் சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின... ஆனால், அதற்குள் இன்னொரு செய்தி தீயாய் பரவியது.

கழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்புகழிவறைகள் மூலம் பரவும் கொரோனா வைரஸ்.. சீனாவில் காலியான குடியிருப்பில் கண்டுபிடிப்பு

உடல்நிலை

உடல்நிலை

"கிம் ஜாங் உடல்நிலை மோசமாகிவிட்டது..அதனால், வடகொரியா அதிபர் கோமா நிலையில் இருக்கிறார்.. ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறாரா என்பது குறித்து உறுதியாக கூற முடியவில்லை" என்று தெரிவிக்கப்படவும், அரசியல் உலகில் மிகுந்த பரபரப்பு மறுபடியும் தொற்றிக் கொண்டது.

சந்தேகங்கள்

சந்தேகங்கள்

அவர் கோமாவுக்கு போய்விட்டால், தற்போது அந்நாட்டை ஆள்வது யார்? அதிபர் இப்போது எங்கே இருக்கிறார்? ஒருவேளை அவர் இறந்திருக்கலாமோ என்று ஊடகங்கள் சந்தேகங்களை எழுப்பியவாறே இருந்தன. இந்நிலையில், ஒரு கட்சி கூட்டத்தில் திடீரென தோன்றிய கிம் எல்லா சந்தேகங்கள், யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

கோமா

கோமா

அதுமட்டுமல்ல, அவரை பார்த்தால் கோமாவில் இருந்துவிட்டு வந்தவரைபோலவே தெரியவில்லை.. தெம்பாக இருக்கிறார்.. வைரஸ் தொற்று மற்றும் சூறாவளியால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களுக்கு தயார் நிலையில் இருக்குமாறு வட கொரிய அதிகாரிகளுக்கு வார்னிங்கும் செய்திருக்கிறார் அதிபர். கொரோனாவை எதிர்கொள்ளும் தம் நாட்டின் நடவடிக்கையில் குறைபாடு இருக்கிறது என்று வேதனையுடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

வறுமை

வறுமை

அதிபர் இப்படி சொன்னாலும், இதுவரை ஒரு கொரோனா வழக்கு கூட அவர்கள் நாட்டில் பதிவாகவில்லை.. ஆனால், வறுமை அதிகமாக உள்ளது.. அந்த வறுமை காரணமாகவே, வைரஸின் இந்த பரவல் பேரழிவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.. இதை தவிர இன்னொரு இயற்கை சீற்றம் அந்த நாட்டை தாக்க போவதாக எச்சரித்துள்ளனர்.

சூறாவளி

சூறாவளி

அது ஒரு சூறாவளி.. "பவி" என்று அந்த சூறாவளிக்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.. அதனால் சூறாவளி வந்தாலும் சரி, வைரஸ் தாக்கினாலும் சரி.. எதுவானாலும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளாராம் கிம்! கோமாவுக்கு போய்விட்டதாக சொல்லப்பட்ட கிம், அங்கு அதிகாரிகளை லெப்ட் & ரைட் வாங்கி கொண்டிருக்கிறார்... அதிகாரிகள் கூட்டத்தில் கெத்து காட்டும் அவரது போட்டோக்கள் இணையத்திலி தற்போது வைரலாகி வருகின்றன.

English summary
North Korea Kim Jong Un warns over Typhoon and coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X