For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கொழந்தசாமியின்" தொல்லை தாங்க முடியலப்பா... ஜப்பான் தீபகற்பத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை

வடகொரியா செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பான் கடற்பகுதியில் விழுந்ததால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பியொங்யாங்: வடகொரியா மீண்டும் செலுத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஜப்பான் கடற்பகுதியில் விழுந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக வடகொரியா பல முறை ஏவுகணை சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்து. இது உலக நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவுறுத்தப்பட்டும் அதன் அதிபர் அடங்க மறுத்து வந்ததால் வடகொரியா மீது ஐ.நா. புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது.

North Korea launches ballistic missile in Japanese waters

இதற்கு அமெரிக்கா அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் வடகொரியா எச்சரிக்கை விடுத்தது. கடந்த செப்டம்பர் மாதம் வான் பரப்பு வழியாக செலுத்திய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் ஏற்கெனவே பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று வடகொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியது. 2,800 மைல் உயரத்தில் சென்ற அந்த ஏவுகணை சுமார் 1000 கி.மீ. கடந்து ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தது.

இதனால் ஜப்பான் தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அதிபர்கள் வடகொரியாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

English summary
North Korea has fired its highest-ever intercontinental ballistic missile and poses a worldwide threat.The missile, launched early on Wednesday, landed in Japanese waters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X