For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலச்சரிவை உண்டாக்கிய வட கொரியாவின் அணு ஆயுத சோதனை

By BBC News தமிழ்
|

வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுதச் சோதனை சில நிலச்சரிவுகளை உருவாக்கியுள்ளதாக தோன்றுகிறது.

இந்த சோதனை நடத்தப்பட்ட பிறகு முதல்முறையாக எடுக்கப்பட்டதாக நம்பப்படும் செயற்கை கோள் படங்கள் இதனை காட்டுகின்றன.

மலைப்பாங்கான புங்யி-ரி என்ற இடத்தில் நிலத்திற்கு அடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வட கொரியா இந்த அணு குண்டு சோதனையை நடத்தியது.

வடகொரியா பற்றி ஆய்வு நடத்துகின்ற "38 நார்த்" என்கிற ஆய்வு நிறுவனம் வணிக ரீதியான செயற்கோள் படங்களைப் பயன்படுத்தி செய்த பகுப்பாய்வில், இந்த நிலச்சரிவுகள் தென்பட்டதாகத் தெரகிறது.

வட கொரியாவின் இந்த அணு குண்டு சோதனை ரிக்டர் அளவுகோலில் 6.3 எனப் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சீனா-வட கொரிய எல்லையில் உணரப்பட்டுள்ளது.

வட கொரியா இதுவரை 6 அணு குண்டு சோதனைகளை நடத்தியுள்ளது. புங்காயி-ரி மலைப்பகுதியின் கீழே குகைகள் தோண்டிதான் இந்தச் சோதனைகள் அனைத்தும் நடத்தப்பட்டன.

வட கொரியா அணு குண்டு சோதனை நடத்தியதற்கு மறுநாள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதையும், வீசி எறியப்பட்ட சரளைக் கல் குவியல்களையும் காட்டுவதாக "38 நார்த்" தெரிவித்துள்ளது.

இந்த பாதிப்புகள் மன்டேப் மலையின் உயர்வான முனைக்கு அருகில் ஏற்பட்டுள்ளன.

வட கொரியா இதற்கு முன்னால் நடத்திய ஐந்து அணு குண்டு சோதனைகளில் காணப்பட்டதை விட அதிகமான அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிவதாக இந்த இடத்தை பற்றிய பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

இந்த சோதனை சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தினாலும், மலையில் இருந்த பள்ளங்களில் சரிவு ஏதும் நடக்கவில்லை.

என்றாலும், புங்கேயி-ரி அணு குண்டு சோதனை இடத்திலுள்ள ஒரு குகை சரிந்துவிட்டதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, வட கொரியா நிலத்திற்கு அடியில் நடத்திய இச் சோதனை, 50 முதல் 120 கிலோ டன் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

. 50 கிலோ டன் என்பது, 1945 ஆம் ஆண்டு ஜப்பானின் ஹிரோஷிமா நகரை துவம்சம் செய்த அணு குண்டை விட 3 மடங்கு பெரியதாக இருக்கும்.

மீண்டும் மீண்டும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதால், இந்த இடத்தை மேலும் சோதனைக்காகப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வல்லுநர்கள் மாறுபட்டக் கருத்துகளைகக் கொண்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இந்த இடத்தில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டால், மலை சரிந்து, கதிரியக்கம் வெளியாகும் ஆபத்து இருப்பதாக சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என்று "த சௌத் சைனா மார்னிங் போஸ்ட்" செய்தி வெளியிட்டுள்ளது.

இத்தகைய அணு குண்டு சோதனைகள் எரிமலை வெடிப்பை தூண்டுவதற்கு காரணமாக அமையக்கூடும் என்பதை "38 வடக்கு" திட்டத்தின் முந்தைய அறிக்கை மறுத்துள்ளது.

பிற செய்திகள்

BBC Tamil
English summary
North Korea's recent nuclear test appears to have triggered several landslides, according to what are believed to be the first satellite images of the aftermath.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X