For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட கொரிய அணு ஆயுத சோதனைத் தளம் மே மாதம் மூடப்படும்: தென் கொரியா

By BBC News தமிழ்
|
வட கொரியாவின் அணுசக்தி பரிசோதனை தளம் மே மாதம் மூடப்படும்: தென் கொரியா
Getty Images
வட கொரியாவின் அணுசக்தி பரிசோதனை தளம் மே மாதம் மூடப்படும்: தென் கொரியா

வட கொரியாவின் அணு ஆயுதப் பரிசோதனை தளம் வரும் மே மாதம் மூடப்படும் என தென் கொரிய அதிபர் அலுவலகம் கூறியுள்ளது.

புங்கியி-ரிஅணு ஆயுதப் பரிசோதனை தளத்தை மூடும் நிகழ்வானது பொதுமக்கள் மட்டுமல்லாது தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வல்லுநர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று தென் கொரிய அதிபர் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளைக்கிழமையன்று நேரில் சந்தித்து கொண்ட வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் முன் ஜே-இன் ஆகியோர் அணு ஆயுதமற்ற கொரிய தீபகற்பத்தை உருவாக்குவதற்கு இணைந்து செயல்படப்போவதாக உறுதியளித்தனர்.

சில மாதங்களுக்கு முன்புவரை இரு கொரியா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் நிலவிய சூழ்நிலையில் இந்த உச்சி மாநாடு நடைபெற்றது.

"உச்சி மாநாட்டின்போது பேசிய வட கொரிய அதிபர் கிம், வரும் மே மாதத்தில் வட கொரியாவின் அணுசக்தி பரிசோதனை தளம் மூடப்படும்" என்று கூறியதாக தென் கொரிய அதிபரின் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தற்போது தென் கொரியாவைவிட அரை மணிநேரம் வேறுபாடு கொண்ட நேர மண்டலத்தை கொண்டிருக்கும் வட கொரியா, அதை தென்கொரியாவின் நேரத்துக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தென் கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
North Korea's nuclear test site will close in May, the South Korean president's office has said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X