For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கட்டும் - வடகொரிய ராணுவத்திற்கு அதிபர் கிம் உத்தரவு

Google Oneindia Tamil News

சியோல்: வடகொரியா ராணுவம் விரைவில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜனவரி 6 ஆம் தேதி சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நடத்தியது.

இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐ.நா.சபை அண்மையில் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது.

பகிரங்க எச்சரிக்கை:

பகிரங்க எச்சரிக்கை:

இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா நேற்று முன்தினம் தென்கொரியாவுக்கு அருகே 6 ஏவுகணைகளை கடலில் வீசியது. இது தென்கொரியா மற்றும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுதத் தாக்குதல்:

அணு ஆயுதத் தாக்குதல்:

இந்தப் பின்னணியில் அணு ஆயுத தாக்குதலை நடத்த தயார் நிலையில் இருக்குமாறு ராணுவ உயரதிகாரிகளுக்கு வடகொரியா அதிபர் ஜிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

அச்சுறுத்தும் அமெரிக்கா:

அச்சுறுத்தும் அமெரிக்கா:

இதுதொடர்பாக அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ, "வடகொரியாவின் இறை யாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ராணுவ வலிமையை கண்டு வடகொரியா அஞ்சாது.

சமாளிக்கவே முன்னெச்சரிக்கை:

சமாளிக்கவே முன்னெச்சரிக்கை:

மக்களின் பாதுகாப்பு, எதிரி நாடுகளுடன் ராணுவ சமநிலையைப் பேணவே அணுஆயுதம், ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறோம். எத்தகைய அச்சுறுத்தல்களையும் சமாளிக்கும் வகையில் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிபர் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
For a second day, North Korea appeared to be flexing its military muscles in the wake of a United Nations vote meant to cripple the nation's nuclear program.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X