For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவிற்கு பதிலடி.. அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு.. மிக தீவிரமாக தயாராகும் வடகொரியா!

Google Oneindia Tamil News

பியாங்யாங்: வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்தும் வகையில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க போவதாக அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் நேற்று முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

Recommended Video

    அணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு... தயாராகும் வடகொரியா

    கடந்த மாதம் காணாமல் போய் திரும்பி வந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் தற்போது முதல் முறையாக அதிகாரபூர்வ மீட்டிங் ஒன்றை நடத்தி உள்ளார். அந்நாட்டு ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் மீட்டிங் ஒன்றை அவர் நடத்தி உள்ளார்.

    கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் கிம் ஜோங் உன் காணாமல் போனார். அவர் இறந்துவிட்டதாக, மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்திகள் பரவிய வண்ணமிருந்தது. அதன்பின் அவர் மீண்டு வந்தார்.

    அணுகுண்டு சோதனை குறித்து ஆலோசனை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் திட்டம்.. பெரும் போருக்கு ஆயத்தமா?அணுகுண்டு சோதனை குறித்து ஆலோசனை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் திட்டம்.. பெரும் போருக்கு ஆயத்தமா?

    மீட்டிங் வந்தார்

    மீட்டிங் வந்தார்

    வடகொரியாவின் உழைப்பாளர் தினம் மற்றும் அங்கு இருக்கும் உர தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவிற்காக அவர் வெளியே வந்தார். அதன்பின் அவர் நேற்று முக்கியமான ராணுவ மீட்டிங் ஒன்றில் கலந்து கொண்டார். வடகொரியா மத்திய ராணுவ கமிஷன் நடத்திய மீட்டிங்கில் அவர் கலந்து கொண்டார். வடகொரியாவின் பாதுகாப்பை உயர்த்துவது தொடர்பாக இவர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

    அணு ஆயுதம்

    அணு ஆயுதம்

    வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை உயர்த்தும் வகையில் இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. வடகொரியா கடந்த 8 மாதங்களாக பெரிதாக அணு ஆயுத ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவில்லை. கடந்த இரண்டு மாதம் முன் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. அதன்பின் அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை எதையும் செய்யவில்லை. அதன்பின் தற்போதுதான் அங்கு அணு ஆயுதம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.

    அமெரிக்கா அதிர்ச்சி

    அமெரிக்கா அதிர்ச்சி

    அணு ஆயுத பலத்தை அதிகப்படுத்த வடகொரியா முடிவு செய்துள்ளது. பெரிய தாக்குதலுக்கு தயார் ஆகும் வகையில் வடகொரியா இந்த முடிவை எடுத்து இருக்கிறது. அமெரிக்காவுடன் வடகொரியா அணு ஆயுத ஒப்பந்தம் செய்யும் நிலையில் இருந்தது. அதாவது மொத்தமாக அணு ஆயுதங்களை கைவிடும் வகையில் ஒப்பந்தம் செய்ய இருந்தது. இதனால் அதிபர் டிரம்ப் மற்றும் அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு நடத்தினார்கள்.

    முழுதாக முடியவில்லை

    முழுதாக முடியவில்லை

    ஆனால் இந்த ஒப்பந்தம் முடியும் முன் இப்படி வடகொரியா முடிவை எடுத்துள்ளது. அமெரிக்காவை இந்த முடிவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இப்படி செய்வதாக கூறுகிறார்கள். அமெரிக்க பாதுகாப்பு படை மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட ஆலோசனை கடந்த மே 15ம் தேதியே நடந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.

    பதிலடி கொடுக்க திட்டம்

    பதிலடி கொடுக்க திட்டம்

    வெள்ளை மாளிகையில் பென்டகன் அதிகாரிகள், சில ராணுவ மேஜர்கள் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கவே வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளது என்று கூறுகிறார்கள். அணு ஆயுத சோதனையோடு பலமான ஆயுதங்களை உருவாக்கவும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அது அணு ஆயுத போராக இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    North Korea president Kim Jong Un talks about Nuclear Bomb after Trump Nuke talks in White house .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X