For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதெல்லாம் சாம்பிள்தான்.. அமெரிக்காவுக்கு பூச்சாண்டி காட்டும் வடகொரியா!

Google Oneindia Tamil News

பியாங்க்யாக்: வெளிநாட்டு தீய சக்திகளின் அச்சுறுத்தல் காரணமாகவே ஏவுகணை சோதனை செய்யப்பட்டது என வடகொரியா தெரிவித்துள்ளது.

கொரிய எல்லையில் அமெரிக்கா, தென் கொரியாவின் ராணுவ படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்தது. எனினும் அந்த இரு நாடுகளும் கூட்டு பயிற்சி பெற்று வந்தன.

இதனால் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா, வடகொரியா தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தயிருந்தது. ஆனால் அந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஏவுகணை

ஏவுகணை

எனினும் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வந்தது. ஆனால் அவை சிறிய ரக ஏவுகணைகள் என டிரம்ப் கூறியதை அடுத்து கிம் ஜாங்குடன் நல்ல உறவு முறை இருந்தது.

ஏவுகணை

ஏவுகணை

இந்த நிலையில் அணு ஆயுத சோதனை அழிப்பு தொடர்பாக அமெரிக்காவும் வடகொரியாவும் வரும் 5-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடகொரியாவின் வன்சான் நகரில் கிழக்கு கடற்பகுதியில் 2 ஏவுகணைகளை நீர் மூழ்கி கப்பலில் இருந்து வடகொரியா விண்ணில் நேற்று செலுத்தி சோதனை செய்தது.

சிறப்பு பொருளாதார

சிறப்பு பொருளாதார

அதில் ஒன்று ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் விழுந்தது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்கிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஏவுகணை குறித்த விவரம் குறித்து தெரியவில்லை.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

இது ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறும் செயல் என ஜப்பான் கூறியுள்ளது. இதுகுறித்து வடகொரியா கூறுகையில் வெளிநாட்டு சக்திகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவே ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவும் இதை செய்துள்ளோம் என்றனர்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவும் வடகொரியாவும் பேச்சுவார்த்தை நடத்தும் போது தோல்வி ஏற்பட்டால் தாங்கள் யார் என காண்பிக்கவே இது போன்ற ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது என தெரிகிறது. மேலும் வெளிநாட்டு சக்திகள் என வடகொரியா, கூறியுள்ளது அமெரிக்காவைத்தான் என்கின்றனர்.

English summary
North Korea says it has tested submarine ballistic missile because of externak threats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X