For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வட கொரியா ராணுவ அணிவகுப்பில் காட்டிய புதிய சக்தி வாய்ந்த ஆயுதம்.. அதிர்ந்த உலக நாடுகள்!

Google Oneindia Tamil News

பியோங்யாங்: கம்யூனிச நாடான வடகொரியாவில் தொழிலாளர் கட்சியின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடந்த இராணுவ அணிவகுப்பில் இடம் பெற்ற ஆயுதம் உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய திரவ ஏவுகணையான இது உளவு செயற்கைகோள்களில் இருந்து தப்பும் வல்லமை உடையது.

வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் 75 வது ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த விழா அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. இந்த விழாவில் இராணுவ அணிவகுப்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் மிக முக்கியமான ராட்சத டிரக்கில் உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படும் நவீன ஆயுதம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய இந்த புதிய ஏவுகணை இதுவரை சோதனை செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த மிகப்பெரிய ஆயுதத்தை வட கொரியாவின் பல போர்க்கப்பல்களில் பயன்படுத்த முடியும். இது இலக்கு வைக்கப்பட்ட எந்த எதிரி நாட்டையும் தாக்கும் உள்ள பயங்கர ஏவுகணை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

35 நாட்களில் 10 ஏவுகணைகள் சோதனை.. இந்தியா அதிரடி சாதனை.. சீனாவுக்கு செக்.. இனி வாலாட்டினால்...! 35 நாட்களில் 10 ஏவுகணைகள் சோதனை.. இந்தியா அதிரடி சாதனை.. சீனாவுக்கு செக்.. இனி வாலாட்டினால்...!

அணு ஆயுத ஏவுகணை

அணு ஆயுத ஏவுகணை

மிகப்பெரிய துல்லியமான திரவ எரிபொருள் ஏவுகணை என்று சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் அணுசக்தி கொள்கை திட்டத்தின் மூத்த சக அன்கித் பாண்டா ட்வீட் செய்துள்ளார்." இந்த திரவ எரிபொருள் ஏவுகணை, அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்டது" என்று ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் திறந்த அணு வலையமைப்பின் துணை இயக்குநர் மெலிசா ஹன்ஹாம் ட்வீட் செய்துள்ளார்.

புதிய ஏவுகணை எப்படி

புதிய ஏவுகணை எப்படி

"வட கொரியா எங்களுக்குக் காட்டியது என்னவென்றால், ஹவாசோங் -15 என அழைக்கப்படும் 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சோதிக்கப்பட்ட ஏவுகணையின் வழித்தோன்றலாக இந்த புதிய திரவ எரிபொருள் ஏவுகணை இருக்கும் என்று தோன்றுகிறது. இது எல்லாவற்றையும் விட மிகப் பெரியது. மிக துல்லியமான சக்தி வாய்ந்தது "என்று அமெரிக்காவை அடிப்படையாக கண்ட கொரிய நிறுவனத்தின் மூத்த இயக்குனர் ஹாரி காசியானிஸ் கூறினார்.

அணுஆயுத ஏவுகணை

அணுஆயுத ஏவுகணை

2017 இல் ஹ்வாசோங் -15 சோதனை செய்யப்பட்டபோது, வடகொரிய "ஒரு சூப்பர்-ஹெவி அணு ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட ஆயுதம்" என்று கூறியது. ஆய்வாளர்கள் அமெரிக்காவின் பெரும்பகுதியைத் தாக்கும் வரம்பைக் கொண்டிருக்கும் என்று நம்பினர் எனவே இன்று வந்துள்ள ஆயுதம் அதை விட அமெரிக்காவிற்கு நிச்சயம் பெரும் அச்சுறுத்தல் தரும் ஏவுகணையாக பார்க்கப்படுகிறது.

நகர முடியும்

நகர முடியும்

வடகொரியா ராணுவ அணிவகுப்பு நடத்தும் முன்னரே, திட எரிபொருள் பாலிஸ்டிக் ஏவுகணையை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறி ஆய்வாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.
எதிர்பார்த்ததை போல வெளியிட்டது. திட எரிபொருள் ஏவுகணைகள் திரவ எரிபொருளைக் காட்டிலும் பெரும் நன்மையை வழங்குகின்றன, அவற்றால் எரிபொருள் லாரிகள் இல்லாமலே நகர முடியும். அதாவது உளவு செயற்கைக்கோள்களிலிருந்து மிக விரைவாக ஏவப்பட்டு எளிதாக மறைத்துவிட முடியும்.

English summary
North Korea unveiled what analysts believe to be one of the world's largest ballistic missiles at a military parade celebrating the 75th anniversary of the Workers' Party broadcast on state-run television on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X