For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிரம்பை நண்பேன்டானு சொல்லிட்டு பகீர் குண்டை வீசும் குழந்தைசாமி

Google Oneindia Tamil News

பியாங்யாங்: அணு ஆயுத சோதனை நடத்துவோம் என அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்கள் சோதனையை நடத்தி வந்தார். இதுகுறித்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் எச்சரிக்கை விடுத்தும் கிம் அந்த அணு ஆயுத சோதனையை நடத்துவதை கைவிட வில்லை.

இதனிடையே அமெரிக்க அதிபரை கிம் கடுமையாக விமர்சனம் செய்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மெரீனா கடற்கரையில் பெண் பிணம்.. அடித்து கொன்றது யார்?.. காலையில் பரபரப்புமெரீனா கடற்கரையில் பெண் பிணம்.. அடித்து கொன்றது யார்?.. காலையில் பரபரப்பு

அதிபர்

அதிபர்

அமெரிக்கா மீது போர் தொடுப்பதாக கிம் அறிவித்தார். இந்த நிலையில் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் சம்மதம் தெரிவித்தார்.

கண்டம் விட்டு கண்டம்

கண்டம் விட்டு கண்டம்

இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையோ நடத்தவில்லை.

எதிரொலி

எதிரொலி

கடந்த சில தினங்களுக்கு முன் டிரம்பை மீண்டும் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்து கிம் ஜாங் அன் கடிதம் எழுதினார். அதன் எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி மைக் பாம்ப்பியோ வடகொரியாவுக்கு வந்து கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேசினார்.

விலக்கவில்லை

விலக்கவில்லை

அந்த சந்திப்பின்போது வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதாக அமெரிக்கா உறுதி அளித்தது. இதற்கிடையில், அமெரிக்கா அரசு முன்னர் உறுதியளித்ததைப்போல் வடகொரியாவின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் எதுவும் இன்னும் விலக்கப்படவில்லை.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

இந்நிலையில், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் ‘பியாங்ஜின்' கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

வெளியுறுவு துறை

வெளியுறுவு துறை

வெறுமனே அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்துவதும் அதற்கு அடிபணிவதாக கூடுதல் அழுத்தங்களை கொடுப்பதும் ஒரு போதும் பலன் தராது என்று வடகொரிய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.

English summary
North Korea has warned the United States it will "seriously" consider returning to a state policy aimed at building nuclear weapons if Washington does not end tough economic sanctions against the regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X