For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உங்க பின்னாடி இருக்குறது யாருன்னு தெரியும்.. ஐரோப்பிய நாடுகளை கடுமையாக எச்சரித்த வடகொரியா

Google Oneindia Tamil News

பியொங்யாங்: ஏவுகணை சோதனை நடத்துவது உள்பட எங்கள் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு செயல்பாடுகள் தொடர்பாக ஐநா சபையில் விவாதிக்க முயன்றால் அமைதியாக இருக்க மாட்டோம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை வடகொரியா கடுமையாக எச்சரித்துள்ளது.

வட கொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த சூழலில் கடந்த 2017 ஆம் ஆண்டு அணுசக்தி சோதனை நடத்தியது அத்துடன் பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் சென்றும் தாக்கும் ஏவுகணை சோதனையும் நடத்தியது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அச்சம் அடைந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி.. நெட்டிசன்ஸ் கோபம்!மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு.. அமைதி காக்கும் ரஜினி.. நெட்டிசன்ஸ் கோபம்!

சட்டை செய்யாத வடகொரியா

சட்டை செய்யாத வடகொரியா

ஆனால் இதைப்பற்றி கொஞ்சமும் சட்டை செய்யாத வடகொரியா மீண்டும் மீண்டும் சோதனைகளை நடத்தி வருகிறது. இந்தசோதனை என்பது ஐநா பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய செயல்களாக உள்ளதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி உள்ளன.

வடகொரியாவுக்கு அழைப்பு

வடகொரியாவுக்கு அழைப்பு

இந்நிலையில் கடந்த வாரம் ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை சோதனை செய்ததாக வட கொரியா கூறியது. இதனால் அந்நாட்டுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ஐ.நா பாதுகாப்பு விதிமுறைகளை மீறி கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை குறித்து விவாதிக்க இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் வடகொரியாவுக்கு அழைப்புவிடுத்தன.

ஜெர்மன் கோரியுள்ளது

ஜெர்மன் கோரியுள்ளது

இதனால், 15 பேர் கொண்ட குழு ஐநா சபையில் அறைக்கதவுகளை மூடியபடி விவாதிக்க உள்ளது. இந்த விவாதத்துக்கு பிரிட்டன் மற்றும் பிரான்சின் ஆதரவுடன் ஜெர்மனி கோரியுள்ளது.

அமைதியாக இருக்காது

அமைதியாக இருக்காது

இது குறித்து ஐ.நாவுக்கான வடகொரியா தூதர் கிம் சாங் கூறுகையில், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் இந்த செயல்களுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிவோம், இந்த விவகாரத்தில் மூன்று ஐரோப்பிய நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். எங்கள் நாட்டின் தற்காப்பு நடவடிக்கைகளை ஒரு விவகாரமாக முன்னெடுத்தால், வடகொரியா அரசு அமைதியாக இருக்காது என்றார்.

English summary
"further urge our desire to defend our sovereignty." North Korea warns US, Britain, France and Germany against raising missile tests at UN
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X