For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிம் ஜாங் உன் கதி என்ன.. வட கொரியா அரசு என்ன செய்கிறது பாருங்கள்.. டவுட் அதிகமாக இதுதான் காரணம்

Google Oneindia Tamil News

சியோல்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், மரணம் அடைந்துவிட்டதாக பரபரப்பாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த நாட்டு அரசு இதற்கு கொடுக்கும் ரெஸ்பான்ஸ் இருக்குதே, அதுதான் சந்தேகத்தை ரொம்பவே அதிகப்படுத்துகிறது.

Recommended Video

    மீண்டும் வந்த கிம்மின் எதிரி... வடகொரியாவில் டிவிஸ்ட்

    கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி முதல் கிம் ஜாங் உன் எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்காததை தொடர்ந்து யூகங்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன.

    36 வயதாகும் கிம் ஜாங் உன் 124 கிலோ எடை கொண்டவர். ஜப்பானிலிருந்து வர வைக்கப்பட்ட சிறப்பு வகை மாட்டு இறைச்சி மற்றும் தினமும் இரண்டு மது பாட்டில்களுடன் காலத்தைக் கழித்தவர்.

    கிம் உயிருடன்தான் இருக்கிறார்.. ஆனால் அவரால்.. வடகொரியாவிலிருந்து ஒரு தகவல் கிம் உயிருடன்தான் இருக்கிறார்.. ஆனால் அவரால்.. வடகொரியாவிலிருந்து ஒரு தகவல்

    ஏவுகணை சோதனை

    ஏவுகணை சோதனை

    எனவே, கிம் இதயத்தில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அறுவை சிகிச்சை செய்தபோது அவர் உடல்நிலை மோசமாகி விட்டதாக ஒரு தகவல் வெளியானது. மற்றொரு பக்கம், அவர் ஏவுகணை சோதனையின்போது காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. வடகொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணைச் சோதனைக்கு பிறகுதான் கிம் ஜாங் உன் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாத நிலைக்குப் போய்விட்டது என்று அந்த செய்திகள் கூறின.

    தென் கொரியா ஊடகம்

    தென் கொரியா ஊடகம்

    இந்த நிலையில்தான் தென் கொரிய நாட்டு ஊடகம் 'டெய்லிஎன்கே' ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஆரம்பத்திலேயே வட கொரிய அதிபர் பற்றி செய்தி வெளியிட்டது இந்த ஊடகம்தான். இதற்குப் பிறகுதான் அமெரிக்க ஊடகங்களும் அதை பற்றி பேச ஆரம்பித்தன. இப்போது டெய்லிஎன்கே, ஊடகம் என்ன கூறுகிறது என்று பாருங்கள்.

    மறுப்பு கூறாத வட கொரியா

    மறுப்பு கூறாத வட கொரியா

    வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், மரணம் அடைந்ததாக கூறி, செய்தி பரவி வருகிறது. இது அரசுக்கு தெரிந்திருந்தும் கூட இதுவரை உரிய முறையில் அதற்கு பதில் சொல்லவில்லை. இது மிகவும் மர்மமாக இருக்கிறது. ஏனெனில் இதற்கு முன்பாக அதிபர் தொடர்பாக எப்பொழுதெல்லாம் வதந்திகள் வந்தனவோ, அப்போதெல்லாம் அந்த நாட்டு அரசு நிர்வாகம் உரிய முறையில் மறுப்பு தெரிவித்திருந்தது. அதுவும் மிக வேகமாக அந்த மறுப்பு தெரிவித்து வழக்கம். இப்போது ஒன்றுமே பேசாமல் மௌனமாக இருக்கிறது.

    தண்டனை

    தண்டனை

    கிம் மரணம் அடைந்து விட்டதாக கூறப்படும் செய்தி ,அந்த நாட்டு மக்கள் பலருக்கும் கூட தெரிந்திருக்கிறது. கிம் இறந்து விட்டார் என்று கூறி சில வீடியோக்கள் வைரலாக சுற்றிவருகின்றன. இதை வட கொரியா, மக்களும் பார்த்துள்ளனர். ஆனால், அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார்கள். அந்த வீடியோவை ஷேர் செய்பவர்கள், பார்ப்பவர்கள் என அனைவரையும் பிடித்து அந்த நாட்டு அரசு தண்டனை கொடுத்து விடும் என்ற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர், மைக் பாம்பியோ அளித்த பேட்டியில், கிம் பற்றிய தகவல் தங்களிடம் இல்லை. அவரது உடல் நிலை தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கிம் ஜாங் உன்னை மூன்று முறை சந்தித்துள்ளார். அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அப்போது அவர் ஆலோசனை நடத்தினார் என்பதும், கிம் தனது நண்பர் என்று அடிக்கடி கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    English summary
    It is widely reported that North Korean President Kim Jong Un has died. But the government has so far not refused the claim.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X