For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறுபடியும் "குழந்தை"யைக் காணோம்.. மண்டை காயும் வட கொரியர்கள்.. என்னதான் நடக்குதோ அந்த நாட்டுல!

வடகொரியா அதிபர் மறுபடியும் மாயமாகி விட்டாராம்

Google Oneindia Tamil News

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மறுபடியும் திடீரென மாயமாகிவிட்டாராம்.. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் ஒருசில அதிகாரிகள் மட்டும் மண்டையை பிய்த்து கொண்டு இருக்கிறார்கள்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த ஏப்ரல் மாதத்தில் திடீரென காணாமல் போனார்.. அதாவது பொதுப் பார்வைக்கு தென்படாமல் மறைந்துவிட்டார்.

North Korean leader Kim Jong Un disappeared again from public

அப்போது அவருக்கு உடம்பு சரியில்லை என்றும், ஹார்ட் ஆபரேஷன் நடந்து வருவதாகவும் சொல்ப்பட்டது.. பிறகு திடீரென அவர் கோமாவுக்கு போய்விட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.. அதற்கு பிறகு கிம் ஜோங் உன் நன்றாகவே இருக்கிறார் என்றும் சொல்லப்பட்டன.

அதற்கேற்றபடி, ஒருநாள் திடீரென மீடியாவில் காட்சியளித்தார்.. அதனால் அவர் நலமுடன்தான் இருக்கிறார் என்பது உறுதியானது.. இதனிடையே, தொற்று காலத்தில் தனது மக்களுக்கு ஆதரவாக நிற்க தவறியதற்கு மன்னிப்பு கேட்டார் கிம்.. அதுமட்டுமல்ல, என் நாட்டு மக்களுக்கு என்னால் உதவி செய்ய முடியவில்லையே என்று தேம்பி தேம்பி அழுதார்.. இந்த காட்சியை எல்லாம் உலக நாடுகள் மிரண்டுபோய் பார்த்து கொண்டிருந்தன.

இந்நிலையில், இப்போது மறுபடியும் மாயமாகி விட்டாராம்.. அவர் பொது பார்வைக்கு ரொம்ப நாட்களாகவே தென்படாமல் மறைந்துவிட்டார்.. கடைசியாக அக்டோபர் 21ம் தேதிதான் கிம் ஜாங் உன்னை மக்கள் பார்த்திருக்கிறார்கள்.

1950-53-ம் ஆண்டில் நடைபெற்ற கொரிய போரில், சீன ராணுவ வீரர்களை எதிர்த்து சண்டையிட்டு உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, தெற்கு பியோங்யாங் மாகாணத்தில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு அன்றைய தினம் வந்திருக்கிறார்.. அதோடு சரி.. ஆளை காணோமாம்!

குடும்பத் தகராறு.. 1 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை! குடும்பத் தகராறு.. 1 வயது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

ஆனால், இந்த முறை அதிபரை காணோம் என்றதுமே யாரும் கண்டுகொள்ளவே இல்லை.. "இவருக்கு இதே வேலையாக போய்விட்டது.. திடீரென காணாமல் போய்விடுவார்... பிறகு திடீரென காட்சி தருவார்" என்பதால், இந்த முறையும் அவர் எப்படியும் வந்து எண்ட்ரி ஆவார் என்று நினைத்து அசால்ட்டாக இருக்கிறார்கள் அந்த நாட்டினர்!

20 நாட்களாக ஒரு அதிபர் காணாமல் போய்விட்டாலும், இதனை அந்நாட்டு மக்கள் சீரியஸாக எடுத்து கொள்ளாமல் நகர்ந்து வருவது ஆச்சரியமாக உள்ளது!

English summary
North Korean leader Kim Jong Un disappeared again from public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X