For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆமைக்கறி சாப்பிட்டா நல்ல சத்து... இது வட கொரியா குழந்தை சாமி கிம்மின் அட்வைஸ்

பசி பட்டினியால் மக்கள் வாடி வதங்கிப்போயிருக்கும் நிலையில் ஆமையை சாப்பிட்டால் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும் என்று வடகொரிய மக்களுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார் கிம் ஜாங் உன்.

Google Oneindia Tamil News

பீஜிங்: கொரோனா வைரஸ் தொற்றினால் வடகொரியாவில் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. சாதாரணமாகவே சத்தான உணவு கிடைக்காமல் திண்டாடும் வடகொரியா மக்களுக்கு இப்போது சாப்பிடக்கூட சரியான உணவு கிடைக்கவில்லை. எங்கும் உணவுப்பற்றாக்குறையும், பசி, பட்டினி பஞ்சத்தால் தவித்து வருகின்றனர். மக்களின் பசியைப் போக்க வேண்டிய அரசோ, ஆமைக்கறி சாப்பிடுங்க அற்புதமாக இருக்கும் நல்ல சத்தும் கிடைக்கும் நோய்களும் நீங்கும் என்று ஆலோசனை கொடுத்து மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டிருக்கிறது.

உலக நாடுகளின் பொருளாதார தடை மற்றும் கொரோனாவால் கடும் உணவு பற்றாக்குறையால் தத்தளித்துவரும் வடகொரியா, பட்டினியால் வாடும் மக்களுக்கு அளித்த அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பற்றாக்குறையே வட கொரியர்கள் உயரம் குறைவாக இருப்பதற்கு முக்கியக் காரணியாக கருதப்படுகிறது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் மேற்கொண்டுவந்த அணுஆயுத நடவடிக்கைகளால் ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளன.அமெரிக்காவுடன் இருமுறை முக்கிய சர்ச்சையில் ஈடுபட்டாலும், தடையை நீக்க அவர்கள் முன்வராத காரணத்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ட்ரம்ப்-கிம் ஜாங் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

தங்கக்கடத்தல் ஸ்வப்னா மலையாள சினிமாவிற்கும் பினாமி பைனான்ஸ் - என்ஐஏ விசாரணையில் அம்பலம் தங்கக்கடத்தல் ஸ்வப்னா மலையாள சினிமாவிற்கும் பினாமி பைனான்ஸ் - என்ஐஏ விசாரணையில் அம்பலம்

வட கொரியா ஆமைக்கறி

வட கொரியா ஆமைக்கறி

கொரோனா பரவலால் வட கொரிய நாட்டின் எல்லைகள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், வடகொரியாவில் உணவு பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது. பசியால் கடும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு வடகொரிய நிர்வாகம், ஒருவகை ஆமையை உணவாக
சாப்பிட அறிவுறுத்தியுள்ளது.

ருசிப்பிரியர் கிம்

ருசிப்பிரியர் கிம்

உணவுப்பிரியரான கிம் விலையுயர்ந்த மாட்டுக்கறி, சீஸ் மற்றும் மது வகைகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர் என அவரது முன்னாள் சமையற் கலைஞர் தெரிவித்துள்ளார். 36 வயதேயான கிம் ஜாங் தற்போது 127 கிலோ உடல் எடை கொண்டவர். வித விதமாக சாப்பிடுவதை விரும்புவார் குழந்தைச்சாமி என்று கூறுகிறார் அவரது முன்னாள் சமையற் கலைஞர்.

ரகம் ரகமான உணவு

ரகம் ரகமான உணவு

வடகொரிய மக்கள் ஒருவேளை உணவுக்கே திண்டாடும் நிலையில், கிம் விருந்து சாப்பிடுவாராம். எதைப்பற்றியும் கவலைப்படமாட்டாராம். போயி கிராஸ் மற்றும் சுமார் 240 பவுண்டுகள் வரை விலைகொண்ட ஜப்பானிய வாக்யூ பீப் ரகம் ரகமாக ரசித்து ருசித்து சாப்பிடுவாராம்.

எந்தக்கட்டுப்பாடும் இல்லை

எந்தக்கட்டுப்பாடும் இல்லை

உணவு விஷயத்தில் கிம் ஜாங் கட்டுப்பாடுகள் எதையும் வைத்துக் கொண்டதில்லையாம். 2015 காலகட்டத்தில் நாளுக்கு 175 பவுண்டுகள் மதிப்பிலான இரண்டு போத்தல் மதுவை குடித்து முடிப்பாராம். திகட்ட திகட்ட குடித்து விட்டு வயிறு முட்ட சாப்பிடுவாராம். சீன பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுறாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவகை சூப்புக்கு நம்ம குழந்தை சாமி அடிமை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில்தான் மக்களின் பசியைப் போக்க ஆலோசனை சொல்லியுள்ளது கிம் டீம்.

பசியைப் போக்கும் டீ

பசியைப் போக்கும் டீ

மக்கள் பசியால் தவித்து வரும் இந்த நேரத்தில் வடகொரியா விஞ்ஞானிகள் குழு மக்களின் பசியைப் போக்கும் மருந்து மாத்திரை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார்களாம். இது மட்டுமின்றி அரசாங்க மருத்துவர்கள் உருவாக்கியுள்ள டீயை குடிக்கும் பொதுமக்களுக்கு பசியை தூண்டாமல், 40 நாட்களில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

ஆமைக்கறி சாப்பிடுங்க

ஆமைக்கறி சாப்பிடுங்க

இந்த தகவலை நாட்டின் உத்தியோகப்பூர்வ ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. அரிசி, சோளம், பழம், இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறைக்கு மத்தியில் அவர்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வட கொரியா மக்கள் பழைய காலத்திலிருந்தே, டெர்ராபின் எனப்படும் ஒருவகை ஆமையை சாப்பிடுவார்களாம். ஆமைக்கறி நல்ல ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் ஊட்டச்சத்தும் அதிகம் கொண்டதாக இருக்குமாம். உயர்ரக உணவுகளை இந்த ஆமைக்கறியை வைத்து சமைத்திருக்கிறார்களாம்.

நோய் போக்கும் ஆமைக்கறி

நோய் போக்கும் ஆமைக்கறி

இந்த ஆமைக்கறியை சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம், மஞ்சள்காமாலை உள்ளிட்ட பெரிய நோய்களும் கூட குணமாகும் என்றும் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் வட கொரிய மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்களாம். என்னடா இந்த வட கொரிய மக்களுக்கு வந்த சோதனை அப்படின்னு நினைக்கறீங்களா? கொரோனா பிரச்சினை முடிவுக்கு வரதுக்குள்ளே இன்னும் என்னென்ன சாப்பிட சொல்லப்போகிறாரோ குழந்தைசாமி.

English summary
The North Korean leader's scientists have ntroduced a range of slimming pills and potions to tackle obesity and relieve pressure on the regime's larder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X