For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அன்பு மலர்களே!.. மீண்டும் ஒன்றாக சேரலாம்.. தென்கொரியாவிற்கு அழைப்பு விடுக்கும் வடகொரியா!

2018ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியாயாவும், தென்கொரியாயாவும் ஒரே கொடியின் கீழ் விளையாட இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பியாங்யாங்: கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் இருக்கும் 'அமைதி கிராமம்' என்ற இடத்தில் இரண்டு கொரியா நாட்டு முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.

ஆனால் இந்தக் கூட்டத்திற்கு பின் சில முக்கியமான விஷயங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு நாடுகளும் வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஒரே கொடியின் கீழ் பங்கேற்க இருக்கிறது.

இதுதான் ஆச்சர்யமான விஷயம் என்றால் இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியாக ஒன்றாக இணையவும் நிறைய முன்னெடுப்புகள் செய்யப்பட இருக்கிறது. அணு ஆயுத சுவிட்சை தன் மேசை மீது வைத்து இருக்கும் வடகொரியா அதிபர் கிம் இப்படி எப்படி மாறினார் என்றுதான் உலகமே வியந்து பார்த்துக் கொண்டு இருக்கிறது.

பங்காளி சண்டை

பங்காளி சண்டை

50 வருடங்களுக்கு முன் கொரிய தீபகற்பத்தில் நடந்த சண்டைதான் இந்த இரண்டு நாடுகளையும் மொத்தமாக பிரித்து வைத்து இருந்தது. அப்போது இருந்து வடகொரியாவும், தென்கொரியாவும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டது. முக்கியமாக கிம் வந்த பின் இந்த பிரச்சனை பெரிதானது.

அமெரிக்கா

அமெரிக்கா

இந்த பிரச்சனையில் அமெரிக்கா குளிர்காய தொடங்கியது. உலகில் பல நாடுகள் தென்கொரியாவிற்கு உறுதுணையாக இருந்தது. வடகொரியாவோ தனியாக தென்கொரிய கடல் பகுதியில் அணு குண்டு போட்டு விளையாடிக் கொண்டு இருந்தது. எப்போது இது உலகப்போராக மாறுமோ என்று எல்லா நாடுகளும் பயந்து கொண்டு இருந்தது.

ஒலிம்பிக்

ஒலிம்பிக்

தற்போது தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரண்டு நாடுகளும் ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இதற்காக 100க்கும் அதிகமான தங்கள் நாட்டு வீரர்களை ஏற்கனவே அந்த நாடு அனுப்பிவிட்டது. தற்போது அவர்கள் அங்கு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

பிணைப்பு

பிணைப்பு

போர் காரணமாக இரண்டு நாட்டிலும் தனித்து விடப்பட்ட குடும்பங்களும், உறவுகளும் இருக்கிறது. தற்போது இவர்கள் அனைவரும் மீண்டும் சந்திக்க இருக்கிறார்கள். தென்கொரிய அரசு இதற்கு ஏற்பாடு செய்துள்ளது. அவர்கள் சந்தித்து பேசும் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வு அடுத்த வாரம் நடக்கும்.

சேரலாம்

சேரலாம்

இது மட்டும் இல்லாமல் தற்போது இரண்டு நாடுகளும் அரசியல் ரீதியா ஒன்றிணைய இருக்கிறது. இதற்கான முன்னெடுப்பை ஆச்சர்யமாக வடகொரியா செய்து இருக்கிறது. மீண்டும் வாருங்கள் சேரலாம் என்பது போல கூறியுள்ளது. முக்கியமான நமக்கு இடையில் இனி எந்த உலக நாடும் வரக்கூடாது, கொரிய தீபகற்பம் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
North Korean officials call South Korea for reunification. Already they have decided to participate under one flag in 2018 Winter Olympic.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X