For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எங்க நாட்டுக்கு வாங்க பழகலாம்.. தென் கொரிய அதிபருக்கு அழைப்பு விடுத்த குழந்தைச்சாமி!

தென் கொரிய அதிபருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி!- வீடியோ

    சியோல்: தென் கொரிய அதிபருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

    தென் கொரியாவில் இந்த ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளது. நேற்று தொடங்கிய இந்த குளிர்கால ஒலிம்பிக் வரும் 25ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    இதன் முதல் நிகழ்ச்சியான தொடக்கவிழாவில், தென் மற்றும் வடகொரிய வீரர்கள் ஒன்றாக இணைந்து ஒரே கொடியின் கீழ் அணிவகுப்பு நடத்தினர். இந்த தொடக்கவிழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அரசியல் ரீதியில் பேச்சு

    அரசியல் ரீதியில் பேச்சு

    இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளிடையே, தென் மற்றும் வட கொரியா நாடுகளுக்கு இடையிலான அரசியல் ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று கூறப்பட்டது.

    ஆளும் வம்சத்தின் முதல் நபர்

    ஆளும் வம்சத்தின் முதல் நபர்

    இந்நிலையில் சியோலில் உள்ள தென்கொரிய அதிபர் மாளிகைக்கு தனது அதிகாரிகள் குழுக்களுடன் வந்தார் கிம் யோ ஜோங். தென் மற்றும் வட கொரியாக்களுக்கு இடையே 1950-1953 வரை நடைபெற்ற போருக்குப் பிறகு வடகொரியாவை சேர்ந்த ஆளும் வம்சத்தின் முதல் நபராக அதிபர் கிம் ஜாங் உன்னின் தங்கையான கிம் யோ ஜோங் தென் கொரியா சென்றுள்ளார்.

    கரு நீல பைல்

    கரு நீல பைல்

    சியோலில் உள்ள ப்ளு ஹவுஸ் அதிபர் அலுவலகத்தில் தென்கொரியா மற்றும் வடகொரியா அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வடகொரிய அதிபரின் தங்கை கிம் யோ ஜோங் கையில் ஒரு கரு நீல நிற பைலை கொண்டு வந்தார்.

    கிம்சி,சோஜூ மதுவுடன்

    கிம்சி,சோஜூ மதுவுடன்

    வடகொரியா சார்பில் கொண்டு வரப்பட்ட ஒரே டாக்குமென்ட் அது மட்டும் தான். இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் கிம்சி சாப்பிட்டு சோஜு மது குடித்தனர். ஏற்கனவே பியாங்ஜியாங்கிற்கு செல்ல விரும்புவதாக தென் கொரிய அதிபர் மூன் ஜெய் இன் தெரிவித்திருந்தார்.

    வடகொரிய அதிபரின் கடிதம்

    வடகொரிய அதிபரின் கடிதம்

    இந்நிலையில் வடகொரியாவுக்கு வருமாறு தென்கொரிய அதிபர் மூன் ஜெய்க்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரிய அதிபர் எழுதிய கடிதத்தை அவரது தங்கை கிம் யோ-ஜோங் தென்கொரிய அதிபரிடம் அளித்துள்ளார்.

    உலக நாடுகளின் கவனிப்பு

    உலக நாடுகளின் கவனிப்பு

    1953ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக தென்கொரிய அதிபரை வடகொரிய அதிபர் சந்திக்க உள்ளார். கடந்த சில மாதங்களாக கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் தென் மற்றும் வட கொரிய தலைவர்கள் சந்தித்திருப்பது உலக நாடுகளின் கவனிப்பை பெற்றுள்ளது.

    English summary
    North korean president calls South korea president to Pyongyang. Kim Yo-jong, the sister of North Korean leader Kim Jong-un, given his letter to Moon jae in. She is the first member of Pyongyang’s ruling dynasty to set foot in the South since the end of the 1950-53 Korean War.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X