For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக வட கிழக்கு இந்தியா மாற்றப்படும்: தாய்லாந்தில் மோடி அதிரடி

Google Oneindia Tamil News

பேங்காக்: வட கிழக்கு இந்தியாவை, தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற விரும்புகிறோம், என்று, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தாய்லாந்தில் 3 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இதையடுத்து, டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங் இன்று, சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.

Northeast India will become a gateway to Southeast Asia: PM Modi in Thailand

ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் மோடி பங்கேற்கிறார்.

இதன் ஒரு அம்சமாக பாங்காக்கில் இன்று நடைபெற்ற, 'SawasdeePMModi' என்ற இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாார் மோடி.

மோடி சொன்ன ஒற்றை வார்த்தை.. மொத்த கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு.. தாய்லாந்தில்மோடி சொன்ன ஒற்றை வார்த்தை.. மொத்த கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு.. தாய்லாந்தில்

அப்போது அவர் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் உலக சுற்றுலா குறியீட்டில் இந்தியா 18 இடங்கள் முன்னேறியுள்ளது. வடகிழக்கு இந்தியாவை தாய்லாந்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்துவது எங்கள் நோக்கம். வடகிழக்கு இந்தியாவை, தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக மாற்ற விரும்புகிறோம்.

எனது தொகுதியும் உலகின் பழமையான கலாச்சார மையமுமான வாரணாசியில் இருந்து, தாய்லாந்திற்கு நேரடி விமானம் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

சீனாவின் அண்டை நாடாக சீனா உள்ளது. இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்கும், தாய்லாந்துக்கும் நடுவே, மியான்மர் நாடு மட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
We are developing Northeast India as a gateway to Southeast Asia says, PM Modi in Thailand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X